மருத்துவமனையில் ஜெயலலிதா: முதல்முறையாக உண்மையை உடைத்த ஆளுநர்

vidya sagar raoஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது கட்டை விரலை தூக்கி காண்பித்ததாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார்.

அவர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் உட்பட பலரும் கூறிவருகின்றனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் மூன்று முறை அப்பல்லோ சென்றதாகவும், அங்கு அவர் மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், ஆனால் அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வித்யாசாகர்ராவ் பிரபல தனியார் ஆங்கில இணையதளத்திற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க ஓரிருமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்படி ஒருமுறை நான் சென்றிருந்தபோது, தான் குணமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார் என முதல் முறையாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஜெயலலிதாவை தமிழக பொறுப்பு ஆளுநர் கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், அப்போது கட்டை விரலை தூக்கி காண்பித்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: