புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஓரிடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்தால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் என்ற தகவல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் காணும் பழ வகைகள், காட்டு தாவரங்கள், வாழை போன்ற பயிர்கள் அழிந்துவிடும் நிலையும் உருவாகி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வடகாடு, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வுப்பணி மேற்கொள்ள வரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி கிராம மக்கள் நெடுவாசல் கிராமத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் இரவிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சமூக வலைதளங்களின் உதவியினால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த புரிதல் ஏற்பட்டது என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டது போல் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டுக்காக நடந்த யுகபுரட்சியால் சட்டம் இயற்றப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
எந்த ஒரு திட்டமும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும் . வாழ்வாதாரங்களை பாதிக்க கூடாது .
எந்த ஒரு திட்டமும் அது எந்த பலன் அளிக்கும் என்றும் சுற்று புற சூநிலையையும் பாதிக்காமலும் என்று இருக்க வேண்டும்– அந்த திட்டத்தினால் அந்த நாடு பெருமளவிவில் பலன் அடையும் என்றால் அதை நடைமுறை படுத்தலாம் — ஆனாலும் அங்கிருப்போருக்கு மாற்று வழிகளை முக்கியமாக செய்து விட்ட பிறகுதான்– இந்தியாவில்/தமிழ் நாட்டில் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். ஆதலின் அங்குள்ளவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் மாற்று வழிமுறைகள் வகுப்பட வேண்டும் — நாட்டுக்காக சிறுது விட்டு கொடுப்பதில் தவறு இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. ஆனால் நட்டாற்றில் விடப்படக்கூடாது– அங்குள்ளவர்கள் பேச்சை நம்புவது கடினம். எல்லாமே ஒழுங்காக செயல் பட்டால் எல்லாமே நலம் தரும். மேற்கு நாடுகள் பட்டு திருந்தின– நாம் பட்டு திருந்தால் அவர்களின் பட்ட பாட்டை மனதில் கொண்டு நன்மை பயக்கும் செய்லகளை நடைமுறை படுத்தலாம். இந்தியாவில் உள்ள ஆறுகள் அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் -அவற்றை இணைக்க வேண்டும்– நடக்குமா? இன்னும் எவ்வளவோ– ஆனால் அங்கு பெரும்பாலோர்கள் என்ன இலவசமாக கிடைக்கும் எப்படி சுருட்டலாம் என்று தானே நினைக்கின்றனர்? இதில் ஜாதி மதம் வேறு? குற்றவாளியை கொண்டாடி மக்கள் பணத்தை செலவழிக்கும் ஈனங்களை என்ன என்று சொல்வது? குழம்பிய குட்டையில் அங்கு சுலபமாக மீன் பிடிக்கலாம். அத்துடன் குட்டையை குழப்ப ஏராளமான நாதாரிகள் இருக்கின்றனர்.