ஒரு வீடு கட்டுவதற்கான முறையான அனுமதியைப் பெறுவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது சராசரி மக்களுக்கு. ஆனால் ஏகப்பட்ட விதி முறைகள் கொண்ட வனப்பகுதியிலும் மலை கிராமத்திலும் ஏறத்தாழ 5 லட்சம் சதுர மீட்டர் (சுமார் 15 லட்சம் சதுர அடி) பரப்பளவில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்திருக்கிறது ஈஷா யோகா மையம். அதன் மீது பல்வேறு புகார்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், மையம் கட்டப்பட்டிருப்பதிலேயே பெரும் முறைகேடுகள் உள்ளன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 400 ஏக்கர் பரப்பில் அமைந் திருக்கிறது ஈஷா யோகா மையம். இதன் பின்னணி குறித்து சமூகஆர்வலரான சிவாவும், இயற்கை ஆர்வலரான யோகநாதனும் நம்மிடையே விரிவாகப் பேசினார்கள் “”1990களின் தொடக்கத்தில் இந்த இக்கரை போலுவாம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் குடியேறிய ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் இங்குள்ள பாமர மக்களிடம் பேசி, விவசாய நிலங்களை வாங்கி மையத்தைத் தொடங்கிவிட்டார். அதன்பின் 26-11-1999ல் தியானலிங்கத்தை நிறுவி, இதனை ஆன்மிகத்தலமாக மாற்றிவிட்டார். சத்குரு என்ற பட்டத்துடன் பிரபலமானார்.
யோகா என்ற பெயரில் பல அரசியல் கட்சியினரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது ஈஷா. 1994-ல் இருந்து 2005 வரை 11 ஆண்டுகளில் அவர் கட்டிய கட்டடங்களின் மொத்த பரப்பளவு 37,424.32. சதுர மீட்டர். இதில் பல கட்டடங்களும் அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்காக இருந்தவர் களின் ஆதரவில் கட்டப்பட்டது. 2006-2011இல் இருந்து ஐந்து ஆண்டுகள் வரைக்கும் கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்தப் பரப்பளவு 55,044.82 சதுர மீட்டர். இது தி.மு.க. ஆட்சிக்காலம். அப்போது ஈஷா யோக மையத்துக்கு கூடுதல் செல்வாக்கு இருந்தது.
இங்கே கட்டப்பட்டிருக்கும் பெரும் பாலான கட்டடங்களுக்கு முறையான அனுமதி கிடையாது. அப்போதைய ஆளுந்தரப்பின் மேல்மட்டம் வரை செல்வாக்கு உள்ள மையம் என்பதால், அப்போது தட்டிக் கேட்கவேண்டிய மாவட்ட வனத்துறை அதிகாரி அன்வர்தீன் கண்டு கொள்ளவேயில்லை. அதனால் யானைகள் தமது உணவுக்காக வலம்வரும் வலசை எனப்படும் காட்டுப் பகுதியை அழித்து -மறித்து -ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாகின.
மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, கடஆ விடம் இருந்து யானை வழித்தடங்களில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டாலும் ஐஆஈஆ (ஐஒகக ஆதஊஆ ஈஞசநஊதயஆபஒஞச ஆமபஐஞதஒபவ) அதாவது மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து அனுமதி வாங்கியாக வேண்டியது கட்டாயமாகும். அந்தக் குழுவில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட வன அதிகாரி, மாவட்ட ஆட்சியர் என உயரதிகாரிகள் வரை இடம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவிடம் அனுமதியே பெறாமல் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஈஷா யோக மையத்தில் பல கட்டடங் களை கட்டிக்கொண்டார் ஜக்கி. அத்தனையும் மலை கிராமம் மற்றும் யானைத்தடத்தில் உள்ள வனப்பகுதி. இதனால் மக்களுக்கும் மற்ற உயி ரினங்களுக்கும் பெரும் பாதிப்பு” என்றனர் அவ்விரு வரும்.
ஈஷா தரப்பில் இந்தப் புகார்களை மறுக்கும் நிலையில். விதிமீறல் குற்றச்சாட்டுகளில் எந்தளவு உண்மை இருக்கிறது என்ற புலனாய்வில் இறங்கிய போது ஒன்றன்பின் ஒன்றாக சாட்சியங்கள் அணிவகுத்தன.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு, 17-08-2012-ல் அப்போது மாவட்ட வன அதிகாரியாய் இருந்த திருநாவுக்கரசு, சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பினார். அதில்… ஈஷா சார்பாக 42.77 ஹெக்டர் பரப்பளவில் ஈஷா யோகா மையத்தினரால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 63,380 சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங்களுக்கும், கட்ட உத்தேசிப்பதாக ஈஷா அறக்கட்டளை யினரால் விண்ணப்பம் மட்டும் அளிக்கப் பட்டுள்ள 28,582.52சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங் களுக்கும் மலைத்தல பாது காப்பு குழுவின் அனுமதி பெறும் பொருட்டு, வனத் துறையின் தடையில்லா சான்று கோரி ஈஷா அறக்கட்டளையினர் 06-07-2011ஆம் தேதி கடிதம் வாயிலாக விண்ணப்பித்துள்ளதை அந்த அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், மலைத்தல பாதுகாப்புக் குழு வினரின் அனுமதியின்றி ஊராட்சியின் அனுமதி அளிக் கப்பட்டதற்கான விவரத்தை அறிய இயலவில்லை என்றும், யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதால் ஈஷா மையத்திற்கு அருகிலுள்ள வனத்தில் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினால் ஏற்படும் சேதத்தை தடுப்பது இயலாத காரியமாகும் என்றும் தெரிவித்து, கட்டடங்களுக்கு அனுமதி தரக்கூடாது எனப் பரிந்துரைத்துள்ளார்.
ஈஷா அமைப்போ இக்கரை போலுவாம் பட்டி ஊராட்சி அனுமதியைப் பெற்றுவிட்டு, வனத் துறை மற்றும் இதர அனுமதிகளுக்கு விண்ணப்பித்திருப்ப தாக இன்றுவரை சொல்லி வருகிறது. மொத்தமுள்ள 4,27,700 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்படுவதை நிறுத்தும்படி போலாம்பட்டியின் வனச் சரகத்திலிருந்து மாவட்ட வனத்துறைக்கு பல முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 19-01-12 அன்று போலாம்பட்டி வனச்சரக அலுவலர் அனுப்பிய கடிதத்தில் ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள புலங்கள் சாடிவயலிலிருந்து தாணிக்காண்டிக்கு யானைகள் செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது என்றும், இதனால் யானைகள் காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டடங்களாலும் ஈஷா அமைத்துள்ள மின் வேலியாலும் வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டு, ஈஷா கட்டடங்களுக்கு அனுமதி தரவேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மண்டல நகர் ஊரமைப்புத் துறை இயக்குநருக்கு மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு 22-2-2013இல் எழுதிய கடிதத்தில், விதிமீறல்களுடன் கூடிய வரைபடத்தை முறையாகத் திருத்திக் கொண்டு வந்து அனுமதி கோருவதாகத் தெரிவித்த ஈஷா மையம், சொன்ன தேதியில் அதனை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், தாணிக்காண்டி மலை வாழ் மக்கள் பயன்படுத்தும் சாலையை ஈஷா பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள 18-2-2008இல் அரசு அனுமதி தரப்பட்டிருப்பதையும் (முறைகேடு) சுட்டிக்காட்டி யுள்ளார்.
ஈஷா மையத்தில் அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கான பணிகளை நிறுத்தச்சொல்லி, வேலை நிறுத்த உத்தரவு 5-11-2012இல் கோவை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்
அரசு நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல், மேலிடத் தொடர்பு தந்த தெம்பால் பணிகளைத் தொடர்ந்த ஈஷாவுக்கு மூடி முத்திரையிடும் உத்தரவு அறிவிக்கையை அதே நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் 21-12-2012 அன்று அனுப்பியது. இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு 2 வருடங்கள் கடந்தும் பணிகள் தொடர்ந்தன. நகர ஊரமைப்பு துணை இயக்குநர்கள்தான் மாறிக் கொண்டிருந்தார்களே தவிர, ஈஷாவின் முறை கேடான கட்டடப் பணிகள் மாறவேயில்லை.
2-8-2013 அன்று அதி காரிகள் நேராய்வு செய்து தியானலிங்க மண்டபம், லிங்க பைரவி கோவில், யோக பயிற்சி மையம் உள்ளிட்ட 50 கட்டடங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டிருப்பதையும், 12 கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியிருந் தனர். இதுகுறித்து நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் க.சபாபதி, 3-9-2013 அன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “உரிய துறைகளின் ஒப்புதலின்றி கட்ட டங்களுக்கு ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்தாலும் அதனை கலெக்டர் அலுவலகம் நிராகரிக்க வேண்டும்’ என அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பிறகும் கட்ட டப் பணிகளை ஈஷா நிறுத்தவில்லை என்பது 17-11-14 அன்று அதிகாரிகள் மீண்டும் நேரடியாக ஈஷாவுக்கு சென்று ஆய்வு செய்தபோது உறுதியானது. தியானலிங்க கோவில், சிவபாதம் கட்டடங்கள் உள்ளிட்டவை அனுமதி யின்றி கட்டப்பட்டிருப்பதையும் மேலும் பல பணிகள் நடப்பதையும் அவர்கள் கண்டறிந் தனர். இதனையடுத்து, ஈஷா மைய பொறுப் பாளர் சுவாமி ஏகா என்பவருக்கு 26-11-14 அன்று நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் க.மூக்கையா அனுப்பிய கடிதத்தில், “அனுமதியற்ற கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும்’ என இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 2-2-2015 அன்று ஈஷா பவுண்டேஷன் பொறுப்பாளர் சுவாமி ஏகாவுக்கு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் மூக்கையா அனுப் பிய கடிதத்தில், “மலைத்தல பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி பெறாவிட்டால் மூடி முத்திரையிடப்படும்’ என எச்சரிக்கப் பட்டும் அனுமதி பெறப்படவில்லை என்றும், உரிய சான்றுகளை அளித்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அதன்பிறகும் ஈஷா நிறு வனம் தன் போக்கிலேயே செயல்பட்டது. இது குறித்து 3-8-2015 அன்று மாவட்ட வன அலுவலர் மு.செந்தில்குமார் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால் (ஈஷா) உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளு மாறு கேட்டிருந்தார்.
ஓராண்டுகாலமாகியும் நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. இறுதி எச்சரிக்கை கடிதம் அனுப்பிய அதிகாரி மூக்கையாதான் சில நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஈஷாவின் செல்வாக்கு அப்படிப்பட்டது.
ஈஷாவின் பக்தர்களாக முன்னாள் -இந்நாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதமர் அலுவலகம் வரை செல்வாக்கு உள்ளது. ஆண்ட -ஆளும் -ஆள ஆசைப்படும் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதி களில் தொடங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஊடக ஆதரவு என ஈஷாவின் நெட்வொர்க் மிகப்பெரியது. அதனால் வனத்துறையோ மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க முயன்றால் தனது மேல்மட்ட செல்வாக்கு மூலம் எல்லாத் தரப்பையும் சரிக்கட்டி அல்வா கொடுத்துவிடுகிறது ஈஷா.
ஆண்டுதோறும் சிவராத்திரியை அந்த வனப்பகுதியில் மிகப்பிரம்மாண்டமாக கொண் டாடுகிறது ஈஷா.
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் திரளுகின்றனர். வாகனங்களின் இரைச்சலும் திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் ஒலி/ஒளி சத்தத்தாலும் அருகில் உள்ள போலுவாம் பட்டி பிளாக்-2 ஒதுக்கு வனத்திற்குள் வாழும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து நம் மிடம் பேசிய சிவாவும் யோகநாதனும், “”கோவை உக்கடத்தில் யானை இறந்தது, மதுக் கரையில் யானை பலி, ரயிலில் அடிபட்டு யானை மரணம் என்றெல்லாம் செய்திகளும் படங்களும் வருகிறதே அதற்குக் காரணம், யானை வழித் தடங்களை ஈஷா மையம் மறித்திருப்பதுதான். தனக்கான பாதை பறிபோனதால் ஊருக்குள் வந்து உயிர்விடுகின்றன யானைகள். அவை விபத்தில் சாகவில்லை. ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தால், கொல்லப்பட்டிருக்கின்றன.
வாயில்லா ஜீவனின் வாழ்வைப் பறிக்கும் மையமா, யோகா என்ற பெயரால் மனிதர்களுக்கு வாழ்வளிக்கப் போகிறது. இங்கே நடப்பதெல்லாம் கார்ப்பரேட் பாணி பிசினஸ்தான். குளிர்பான கம்பெனிகள் போலவே தாணிக்காண்டி கிராமத்தின் வழியே பாயும் ஓடையை மறித்து பாலம் கட்டி, பக்கத்தில் கிணறு தோண்டி தினமும் 5000 லிட்டர் தண்ணீரை அனுமதியின்றி எடுத்துச் செல்லும் ஜக்கியின் திறமை மெச்சத் தகுந்ததுதான்” என்கிறார்கள் வேதனையும் விரக்தியுமாக.
தரை வழியான பயணம் மேற்கொண்டால் ஜக்கிக்கு நேரம் வீணாகிறது என த 22 என்ற ஹெலி காப்டரை 14 கோடியில் வாங்கியுள்ள ஈஷாவின் உலகம் அத்துமீறல்களாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பாலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பூனைக்கு யார் மணிகட்டப் போகிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. ஜெகத்குரு எனப்பட்ட சங்கராச்சாரியார் மீதே சட்டப்படி நடவடிக்கை எடுத்த ஜெ. அரசு, சத்குரு பக்கம் கவனத்தைத் திருப்பும் என்ற நம்பிக்கை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்க நினைக்கும் இயற்கை ஆர்வலர்களிடம் மிச்ச மிருக்கிறது.
-அருள்குமார்
-http://www.nakkheeran.in
காய்கின்ற மரம் தான் கல்லடி படும். தமிழன் என்றுதான் திருந்துவான். ஈஷா யோக மையத்தால் வரும் நன்மையால் வயறு எரியும் தமிழா என்றுதான் திருந்துவாய்.
இது வயிறு எரியும் விஷயமில்லை சுவா அவர்களே .. போலி சாமியார்களை கூண்டோடு அளிக்கும் போராட்டம்.. உண்மையான ஆன்மிக குருமார்கள் இப்படி இயறகையை அழித்து பிரம்மாண்டத்தை மட்டுமே விரும்ப மாட்டார்கள். இதில் இப்போதும் படித்தவர்களும் பணக்காரர்களும்தான் அதிக அளவில் இது போன்ற போலி ஆன்மீகவாதிகளிடம் பாலியவர்கள். எளிமையும் தூய்மையுமே ஆன்மிகத்தின் அடித்தளம்.
நிலத்தை அழித்தார் சரி ..அதனால் ஏதோ மக்கள் பயனடைந்தனர் ,, மக்களை ஏமாற்றி 1000 ஏக்கரில் அரசியல் நாய்கள் அடித்த ஏக்கர் என்னாயின ? அதை கேட்க துப்பில்லாத மடையர்கள்,,,
நிலத்தை அளித்ததில் மக்கள் என்ன பயன் அடைந்தனர். தமிழகத்தில் இல்லாத கோவில்களா? சரித்திர பூர்வமிக்க கோவில்கள் பராமரிப்பின்றி அலங்கோலமாய் கிடக்கிறது . குறிப்பாக 63 நாயன்மார்களின் தளங்கள். உண்மை ஆன்மிகவாதி , குருமார்கள் எளிமையைத்தான் நாடுவார். எல்லாவற்றையும் எல்லாரும் தட்டி கேட்க முடியாது. அப்படி இருந்தால் உலகம் யாவும் நலம். ஆன்மிகத்தை வைத்து விற்று பிழைப்பு தேடும் அறிவிலிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்கே கருணை உள்ளதோ அங்கே விளங்குக அருட்பெரும்ஜோதி.
நல் நண்பர்களே! மக்களுக்கு எவ்வளவு நன்மை உண்மை போதிப்பது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் அவர்களுக்கான அடிப்படைகளைக் கொடுத்து பற்றாக்குறைகளை (அரசுக்கல்வி இருக்க இடம் நிரந்தரவருமானம் அரசு வேலை ** தனியார் ஆங்கிலப் பள்ளி கல்லூரி போன்றன ஆகவே ஆகாது ** ) நீக்கினால் மட்டுமே அவர்களால் சுயசிந்தனைக்கு தகுதிபெற இயலும் நிச்சயம் மாற்றம்நிகழும் இன்னும் சுயநல மிருகங்கள் லஞ்சம் ஊழல் கமிஷன் இலவசம் என உளவியல் நோய்களைப் பெருகவிட்டு வளர்க்கிறார்கள். என்பது சரியா ! தவறா ? நல்லதை நடத்திகாட்ட முனையும் நல்லவர்களுக்கு வல்லமை பற்றாகுறை வாய்ப்பின்மை மற்றும் ஒற்றக்கருத்து
ஒன்றினையாமை! எனவே இதனால் சுயநல பிசாசுகள் ஆட்டம் பாட்டும் பகட்டும். போட்டு வளர்ந்துவிட்டது *மாம்பழத்தின சுவை கசப்பு என்றும் பாவக்காய் சுவை இனிப்பு என்றும் தொடர் முயற்சியால் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு மக்களை நிறுத்தி வைத்துள்ளார்கள் மகாமோசடிநாயகர்கள்! இதற்கு துறை யார்? யார்? எப்படி? எப்படி? அதிகார லஞ்சம் அரசியல் செல்வாக்கு ஊழல்கூட்டு தரகுதாரக மந்திரம் விளம்பர கவர்ச்சி * ஆரோக்யமும் தியானமும் யோகாபயிற்சி போன்றன இவ்வளவு ஆடம்பர சூழலில் நடக்க அவசிமமெனில்!? மலைஉச்சி ரானுவ காவல் மற்றும் பயிற்சி, ரமணமகரிசி, அரவிந்த்அன்னை, பாரம்பரிய விளையாட்டு மற்றும் உடல்பயிற்சிகள் போன்றனவற்றை ஒப்பிட்டால் !!!இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஓடி ஓடி மடிகிறோமா என்றல்லவா உண்மை. . *சிப்பி *