மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மத்திய அரசு நீதிவிசாரணை அமைக்க வழியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே எதிர்வரும் 8ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி ஓ.பன்னீர் செல்வத்தின் அணி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பொலிசாரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத அறப்போர் அனைத்து வருவாய் மாவட்டத்தின் தலைநகரங்களில் நடைபெறும் என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு நீதி கேட்க அதிமுக தொண்டர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் உண்ணாவிரத அறப்போரில் கலந்துக்கொள்ள வேண்டும் என அவைத்தலைவர் மதுசூதனன் அழைப்பு விடுத்துள்ளார்.
-http://news.lankasri.com