அமெரிக்காவை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!

us_indianஅமெரிக்காவில் இந்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கலோரிடா வசிக்கும் இந்தியரின் வீடு மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு இந்தியரின் வீடு மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கலோரிடா நகரில் வசிக்கும் இந்தியரின் வீடு மீது மர்ம நபர்கள், முட்டைகள், நாய் கழிவுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட முட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், வீட்டின் பல இடங்களில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை ஒட்டியுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அந்த பிரசுரங்களில் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இது தொடர்பாக எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: