நெடுவாசல் விரைந்த டிராஃபிக் ராமசாமிக்கு விழுந்த அடி உதை…..கண்டுகொள்ளாமல் இருந்த பொலிஸ்

traffic ramaswamyசென்னையை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 150 அடிக்கும் உயரமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்ற சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமியை பொதுமக்கள் சரமாறியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிறுவனர் அடிகளாரை அம்மா என்று தான் அழைப்பார்கள்.

அவருடைய பிறந்தநாள் மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்காக, மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கும் 100 அடிக்கும் உயரமான அடிகளாரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருடம்தோறும் இப்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பது ‘அம்மா’ பக்தர்களின் வழக்கம்.

bangaru adigalarமேல்மருவத்தூர் வழியாக நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற ட்ராபிக் ராமாசாமி அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களைப் பார்த்ததும், காரை விட்டு இறங்கி, அதனை அகற்ற முற்பட்டுள்ளார்.

இதனை, பார்த்த அப்பகுதி மக்கள் டிராஃபிக் ராமசாமியை சரமாறியாக அடித்து காயப்பட்டுத்தியுள்ளனர்.

மேலும், இதைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு பொலிஸையும் தாறுமாறக அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதன்பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, ட்ராபிக் ராமாசாமி நெடுவாசல் சென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் உத்தரவு நகலைக் கான்பித்த பிறகும் என்னைத் தாக்கினார்.
அதனை அங்கு நின்றுகொண்டிருந்த காவல் உதவி ஆய்வளர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நெடுவாசலிலிருந்து இதுகுறித்து வழக்குத் தொடுப்பேன் என கூறினார்.

– manithan.com

TAGS: