சென்னை: இந்தியாவில் அதிக அளவில் உள்ளூர் மக்கள் சுற்றுலா செல்ல சிறந்த மாநிலமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 34.4 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக உத்திர பிரதேசத மாநிலத்தில் 29.9 கோடி சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது , 2016ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணமாக மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் சிறந்த மருத்துவ வசதி உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்களை காண சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் இருப்பதாகவும் இந்திய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சிறப்பாக இருப்பதாகவும் சுற்றுலாத்துறை கூறியுள்ளது.
இது குறித்து சுற்றுலா ஏற்பட்டாளர் ஒருவர் கூறுகையில் , தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் ஒரு நாளைக்கு 6 முறை பூஜைகள் நடைபெறுவதால் , சுற்றுலா பயணிகள் தங்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து மகிழ்ச்சியுடன் வந்து செல்கிறார்கள் . ராமேஸ்வரத்தில் உள்ள 12 ஜோதி லிங்கத்தை தரிசிக்கவும் , மதுரை மீனாட்சி அம்மன கோவிலுக்கு சென்று வர சுற்றுலா பயணிகள் அதிக அளவு விரும்புகின்றனர் என்று தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் செல்ல சிறந்த இடமாக தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தை தொடர்ந்து 3 வது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.
அதனால் தான் என்னவோ தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது!