பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

palaruடெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஆந்திர அரசு கூடுதலாக தண்ணீர் தேக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது. அணையின் உயரத்தை அதிகரிப்பதும் புதிய அணைக்கட்டுவதும் சட்டத்திற்கு எதிரானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.’

தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகவுங்ம் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: