அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் கெரோலினா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வந்த ஹர்னிஷ் பட்டேல் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்த பொலிஸார், இது இனவெறி தாக்குதல் இல்லை எனவும், இதற்கான ஆதரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம், இந்திய வம்சாவளி பொறியிலாளர் ஒருவர் கன்சாஸ் பாரில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இனவெறி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்து இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையினால் இதுவும் இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com