அரிசி வேண்டுமா… ஹைட்ரோ கார்பன் வேண்டுமா… சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

seeman344சென்னை: நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சீமான், “சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் பூமியை தோண்டியா எரிபொருள் எடுக்கிறது? அங்கு வீடுகளில் பயன்படுத்தும் கழிவுகள் உள்ளிட்டவைகளில் இருந்துதான் எரிபொருள் தயாரிக்கப்படுகின்றன. அதே போல் நாம் செய்ய முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் போராட்டத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. “உழவு இல்லையேல்.. உணவு இல்லை.. உணவு இல்லையேல்.. உலகு இல்லை.. அரிசி வேண்டுமா.. ஹைட்ரோ கார்பன் வேண்டுமா என்பன உள்ளிட்ட பதாகைகளை கைகளில் உயர்த்திப் பிடித்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முன்னதாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்டத்திற்கென அமைக்கப்பட்ட மேடையில் ஏறி பறை அடித்து போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

tamil.oneindia.com

TAGS: