ஆஸ்திரேலியாவுக்கு, சட்டம் படிக்கச் சென்றவர், இந்தியாவை சேர்ந்த உப்மா விர்தி வயது, 26. படிக்கச் சென்ற இடத்தில், குடிக்க நல்ல தேநீர் கிடைக்காததால், மிகவும் அவதிப் பட்டார்.
தன்னை போல் வேறு யாரும் டீ இல்லாமல் தவிக்க கூடாது என நினைத்து, தானே ஒரு டீ கடையை ஆரம்பித்தார். பெற்றோரும், மற்றவர்களும், ‘உனக்கென்ன பைத்தியமா…’ என்று கேட்டாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், விதவிதமான டீ தயாரித்து விற்க, ஆரம்பித்தார்.
அதை தொடர்ந்து வியாபாரம் சூடு பிடித்தது. கூடவே, சட்டம் படித்து வக்கீலும் ஆனார். கடந்த, 2016ல் வழங்கப்பட்ட, ‘இந்தியா – ஆஸ்திரேலியா, பிசினஸ் அன்ட் கம்யூனிட்டி விருது’ இவருக்கு கிடைத்தது.
‘டீ விற்றாலும், வக்கீல் கோட்டை கழற்ற மாட்டேன்…’ என்கிறார் இவர். வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் என்பார்கள். இந்த மாணவிக்கு தான் ரசித்து, ருசித்து குடிக்கும் டீயே கூடுதல் தொழிலாக மாறியது. வளம் மிக்க வாழ்வு வளா்ந்து வருகிறார்.
-manithan.com