நீதி கிடைக்கும் வரை பிரிட்சோ உடலை பெற மாட்டோம்: மீனவர்கள் ஆவேசம்

fishermen4-07ராமேஸ்வரம்: தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்புகள் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கைஇ கடற்படையினர் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் சுடத் தொடங்கினர். அப்போது தப்ப முயன்ற படகில் இருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இதில் படகு ஓட்டுநர் சரோனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் கையாலாகாதத்தனத்தை கண்டு ஆவேசம் அடைந்துளளனர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்கத்தினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை பெறக் கூடாது என்று முடிவ செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இத்தகைய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oneindia.com

TAGS: