சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் 3 கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு எழுதினார்.
அந்தக் கடிதங்களுக்கு சின்ன மரியாதையாவது கொடுத்து மோடி, இலங்கை அரசை நிர்பந்தம் செய்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாரா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
விழா காலம், பண்டிகையின் முக்கியத்தும் பேசி வரும் பிரதமர் மோடி, கச்சத் தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் பேச வேண்டும் என்று முதல்வர் கோரியும் மோடி வாயே திறக்கவில்லை.
குஜராத்தில்…
தமிழ்நாடு, குஜராத்திலோ அல்லது டெல்லியிலோ இருந்திருந்தால் பிரதமர் மோடி வாய் திறப்பார் என்று தமிழக மக்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. முதல்வர் எழுதிய 3 கடிதங்களின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரிட்சோவின் உயிர் போயிருக்காது என்று ராமேஸ்வரம் மக்கள் கூறியுள்ளனர்.
700 மீனவர்கள் சுட்டுக் கொலை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் போதோ அல்லது அவர்கள் தாக்கப்படும் போதே இந்தியக் கடற்படைக்கு அவர்களை காக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுகடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 ஆண்டுகால கொடுமை
இலங்கை கடற்படையின் இந்த கொடூர தாக்குதல்கள் சுமார் 40 ஆண்டுகளாக செய்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது மீனவர்களை வெளியே விடுவது என்பது எல்லாம் நாடகம் போலவே நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் தரப்பில் எவ்வளவு கோரிக்கைகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
தொடர்ந்து சிறையில்…
கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிறகு தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு சுமூக தீர்வு எட்டப்பட்டு விடும் என்று மீனவர்கள் நம்பி இருந்த வேளையில்தான், சுமார் 85 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமான 125 படகுகள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
வாய் திறங்க மோடி..
மத்திய அரசின் முறையற்ற போக்கே இன்று பிரிட்சோவின் உயிர் நடுகடலில் இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மோடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்றால் மோடி இது குறித்து வாய் திறக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களும் கோரியுள்ளனர்.
மோடியாவது..காடியாவது நம்ம உரிமையை நாமதான் மீட்கணும்! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு! சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த நிலங்களை மீட்டு தனி தமிழர் நாடு அமைந்தால் மட்டுமே தமிழன் தலை நிமிரும்!!!