இலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அராஜகமும், வலையறுப்பு நிகழ்வுகளும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கதையாகி வருகின்ற இச்சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது, சிறைப்பிடிப்பது எனச் சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல.
அன்றாட நிகழ்வுகளாகிப் போன இத்துயரத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ சிங்கள இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இந்தியப் பெருநாட்டில் வரி செலுத்தி,வாக்கு செலுத்தி வாழ்கிற 8 கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதித்து வருகிறது.
-http://www.tamilwin.com
இலங்கை மீது போர் தொடுக்க வேண்டுமானால், நீ தனி நாடு வைத்திருக்க வேண்டும் ! சும்மா பூச்சி காட்டாதே !!
தமிழகம்இந்தியாவில் இருக்கா தனிநாடா?
இந்தியாவில் இருந்தால் அந்தநாட்டின்
பிரதமருக்கு கோரிக்கை வைத்தால் பூச்சி
காட்டுவதாக அர்த்தமா?உதாரணத்துக்கு
நம்நாட்டில் இந்தியரைபக்கத்துநாட்டுக்காரன்
சுட்டுகொன்றால் நாம்நம்பிதமருக்கு
கோரிக்கைவைக்காமல் யாரிடம் கேட்பது,ஐயா
புரியல,சட்டசபையில் சட்டை கிழிந்ததுக்கு
இந்திய அதிபரைசந்தித்து முறையிட்டாரே
சுடைலின் அதையெப்படி எடுத்துக்கொள்வ
து?
தமிழர்களின் குரல் அப்படி ஒலித்தால் தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் நமக்குத் தடையே திராவிடன் தானே! அதனால் ஒரே குரலாக நம்மால் ஒலிக்க முடியவில்லை!
ஐயா சீமான் அவர்களே– ஒன்றையும் புடுங்க முடியாது– தமிழர்கள் எல்லாம் குடியும் குடித்தனமாக இன மொழி பற்று இல்லாமல் வடக்கத்தியனுக்கு வால் பிடித்தால் ஒன்றும் நடக்காது. உங்களுக்கு எவ்வளவு ஆதரவு கிடைத்தது இது வரை? ஒரு இடம் கூட கிடைக்கவில்லை –இதிலிருந்தே தெரிய வேண்டும் தமிழனின் லட்சணம் என்ன என்று.
இது பற்றி இந்திய ராணுவம் ஒன்றுமே கூறாமல் இருப்பதன் காரணம் என்ன ? முதலில் தமி ழ் மீனவர்கள் சிங்கள கடலுக்குள் நுழையவில்லை என்று யார் உறுதி பட கூறமுடியும் ? சும்மா வள வள வென்று கத்திக் கொண்டிருக்காமல் உண்மையான காரணத்தை அறிய சீமான் முற்பட வேண்டும்.
நாம் பல்வேறு வகைகளில் பிரிந்து வாழும் வரை நமது மக்களை காப்பதும் இயலா ஒன்று என்பது வேதனையான உண்மை .
தமிழன் தனி நாட்டை ஆதரித்தால் என்ன நடக்கும் ? தீவிரவாதி என முத்திரை குத்தப்படுவான் … ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வழி கண்ட உண்மை! ஆகையால் மறைத்து கூறுகிறார்…