இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதிற்கு கவலை தெரிவித்துள்ள இலங்கை, அனைத்து அரசாங்க முகாமைகள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இந்திய மீனவர்களை மனிதத்தன்மை நிறைந்த முறையில் நடத்தும் என உறுதியளித்துள்ளது.
மேலும், முதற்கட்ட விசாரணையில் இலங்கை கடற்படைக்கும் இச்சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும், உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தால், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
-http://news.lankasri.com


























