ஈஷா யோகா மையத்தில் கல்லூரி மாணவன் மர்ம மரணம்: நடந்தது என்ன?

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான ரமேஷ் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

ஈஷா யோகா மைய குளத்தில் மூழ்கிய ரமேஷ் குளிர் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக ஈஷா நிர்வாகம் கூறியதாவது, இதய நோய், வலிப்பு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் குண்டத்தில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம்.

மாணவனுக்கு இயல்பு நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. எச்சரிக்கையை மீறி குளித்ததால் இறந்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: