ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம்.
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால் மூடியுள்ள லொறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத பொலிஸ் தோளில் இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில் மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும், வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
-http://news.lankasri.com
இதுல என்னையா ‘அதிர்ச்சி’ ? திருடர்களை ராஜ மரியாதையுடனா நடத்துவானா எவனாவது ? இதில் தமிழ் திருடனா இருந்தா என்ன ? அல்லது பஞ்சாபி திருடனா இருந்தா என்ன ? ஏன் திருடுகிறான் என்றுதான் பார்க்க வேண்டும் ! அவன் நாட்டில் அவனுக்கு வேலை இல்லை, காரணம் வேலை வாய்ப்பு உருவாக வில்லை. வேலை வாய்ப்பு எப்பொழுது உருவாகும் என்றால் : படித்து , சிந்தித்து , புதுமையை கண்டு பிடுத்து …… இப்படி பல….. சும்மா கிடந்தா எதுவுமே வராது …..
எந்தவொரு குற்றமும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே .மனிதாபிமானமற்ற இந்த காட்டுமிராண்டிகளிடம் இருந்து நாம் மீள வேண்டும் எனில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம் .நம்மை காக்க நம்மை விட்டால் ஆளில்லை
எடப்பாடி பழனிச்சாமி மன்னார்குடியில் குடும்பம் நடத்தும் வரை இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியது தான்!
திலிப், அவசரப்படாதீர்கள். செம்மரம் வெட்டி கடத்தியவர்கள் இந்த ஏழைத் தமிழ்த் திருட்டுப் பயல்கள் தான்.ஆனால் இந்த செம்மரங்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளி நாடுகளுக்கு கடத்தப்படவில்லை; விற்கப்படுகிறது! ஒவ்வொரு மரமும் ஒரு கோடி பெரும் என்கிறார்கள். யார் திருட்டுப்பயல்?
5 காசு திருடுனா தப்பா ? 50 கோடித்திருடனா தப்பா ? என்ற பட்ட்றி மற்றந்தத்த்திற்கு தலை எட்க்க போங்க abraham terah ….
ஐயா dilip 2 அவர்களே- திருடர்களுக்கு நான் நண்பன் அல்ல– ஆனால் மனிதாபிமானத்துடன் எவரையும் நடத்த வேண்டும்,- அதுதான் மனித நீதி நியாயம்– நாம் ஒரு அறிவார்ந்த மரியாதையான சமுதாயம் என்ற நிலைக்கு உயர நாம் மட்டரகமாக செயல் படக்கூடாது. நாம் நாகரீகமான இனம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் பணம் உள்ள திருடனும் கொள்ளைக்காரனும் இப்படி நாறடிக்கப்பட மாட்டான். உங்களின் சிந்தனைக்கு– இந்தநாட்டின் நம்பிக்கை நாயகன் 2 .6 யை எப்படி தன்னுடைய வங்கி கணக்கில் போட்டான்? அது என்ன தன்னுடைய வேர்வையிலா சேர்த்தான்? அல்தான்தூயா கதை……………………………………?
ஏழைத் தமிழர்களுக்கு வேலை தருகிறேன் என்று கூப்பிட்டு கடைசியில் அவனுக்கு கூலியும் தராமல் அவனுக்குத் திருட்டுப் பட்டமும் கட்டுகிற திறமை ஆந்திர மாநிலத்திற்கு கை வந்த கலை. அவர்கள் நேரம் நல்ல நேரம். தமிழகத்தில் எந்த அரசாங்கமும் இயங்கவில்லை! இன்னமும் செய்யலாம்!
வேற ஒரு மாநிலத்தில் பொய் திருடிட்டு, மனிதாபிமானிலத்தை பட்ட்றி பேசி பேசி நல்ல பெரு எடுக்கிறது இதுதானா ? ஏழ்மை நிலையை காட்டி விடுவதால் நீங்கள் சரி என்றாகி விடுவீர்கள் அப்படித்தானே abraham terah அவர்களே ? இந்தியாவில் 66 கோடிக்கு மேல் அன்றாட காட்சிகள். இவர்கள் திருடி விடடாள், திருட்டு திராவிடர்கள் ….. நல்ல காமிடி பீசு சார் நீங்கள் ….
நண்பரே! ஏழைகளின் உயிர் உங்களுக்குத் தமாஷான விஷயமாக போய்விட்டது. ஒரு ஏழையை எப்படியெல்லாம் வாட்டி எடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிய நாளாகும்.
ஐயா dilip 2 அவர்களே– இந்தியா ஒரு நாடு– மாநிலங்கள் வாரியாக பார்ப்பது கூடாது– இங்கு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் வாழ முடியும்.இதே போல் தான் அங்கும். ஆனால் அங்கு இந்தியன் என்ற எண்ணம் குறைவே– அத்துடன் தமிழ் நாட்டை எவனும் மதிப்பதில்லை– வேறு என்ன சொல்ல.மற்ற மாநிலங்கள் மக்கள் எவ்வளவு பேர் தமிழ் நாட்டில் கோடி கட்டிப்பறக்கிறான்கள் -அவர்களை எல்லாம் விரட்டலாமா? இதே போல் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் அங்கிருந்த பண்டிட்ஸ் என்னும் இந்துக்களை விரட்டி அடித்து விட்டனர்-சொந்த நாட்டிலேயே இவர்கள் இப்போது அகதிகள்– என்னைப்பொறுத்தமட்டில் அங்கு அரசியல் விபச்சாரம் மிக தீவிரமாக நடக்கிறது. இது தான் சரியான முறையா?
எல்லாவற்றுக்கும் தமிழ் நாட்டு அரசியலே காரணம்– சூடு சொரணை அற்ற ஈனங்கள்
திருடர்களுக்கு என்னமா வக்காலத்து வாங்குகிறீர்கள் , அடப்பாவிங்கள ! உங்களையும் மக்கள் நம்புதடா …. இதுதான் உலகம் …… நன்றாக நினைவில்கொள்ளுங்கள் : திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது , அவரை மூன்றாம் தர கைதுதான் செய்தது போலீஸ். எனவே திருடர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கல், அதுவும் தமிழை காட்டி!
ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியில் கருணாநிதியை கைது பண்ணியது. பிறகு என்ன நடந்தது? கருணாநிதியும் பொய் வழக்கு போட்டு அவளை மட்டரகமான நடத்தி இருக்கலாம். ஆனாலும் செய்ய வில்லை. இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வில்லை– குடம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை- நீதி மன்ற தீர்ப்பு வரும் வரையில். சிலருக்கு சில உண்மைகள் புரிய கடினம்.
குற்றம்
கருணாநிதி ஜெயாமேல் இருந்த காழ்ப்புணர்ச்சியில் பொய் வழக்கு போட்டாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவளின் சேலையை உருவினார் சட்டசபையில் என்பது கருணாநிதி மறைந்து நூறாண்டுகள் ஆனாலும் மறையாத உண்மை..
முதலில் கலைஞர் ஜெயலலிதாவை கைது செய்த பொழுது, 300 காலணிகள் கிடைக்க பெற்றன. 300 kg தங்கம் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்ட்திற்கு “நான் ராஜ பரம்பரை” என்று ஜெயலலிதா கூறியதை மறந்தீர்களா ? நன்றாக கதை அழைக்கிறீர்கள் en thaai thamizh ! இப்ப இதுவெல்லாம் ஒரு பெஷன். எதற்கெடுத்தாலும் தமிழர்கள் தாக்க படுகின்றார்கள் , மற்றவன் எல்லாம் கெடடவன், தமிழன் மட்டும் நல்லவன், திருடனாக இருந்தாலும் கூட என்று எழுதி தள்ளுவது ! பேசி பேசியே கேடடானாம் தமிழன் …. அதற்க்கு பேசி பேசியே கெடுத்தானா தமிழன் என்னும் ஆடை மொழியை காக்க பாடு படுகிறார்கள் போலும் …
ஐயா DILIp 2 அவர்களே நான் கதை ஒன்றும் அளக்கவில்லை- எனக்கு தெரிந்ததை சொன்னேன்– எனக்கு தெரியாததை நீங்கள் கூறுங்கள்– ஆனாலும் சிறிது மரியாதை தேவை– எனினும் அந்த மனப்பக்குவம் உங்களுக்கு குறைவு என்பது வெள்ளிடை மலை.
மரியாதை குடுத்தால், மக்களை குழப்புவதில் இருந்து பின் வாங்கி விடுவீர்களா en thaai thamizh ?
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திரவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
புரியாதவர்களுக்கு புரியாமலேயே இருக்கட்டும்.நன்றி.