சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி சாடியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-http://www.dinamani.com
தனி தமிழ் நாடு உருவாக்குங்கள் .உலகம் உங்களை திரும்பி பார்க்கும்.
சுப்ரமணியம் சொல்வது உண்மையென்றால் கருணாநிதி ஒரு துரோகியே– ஆனாலும் அது நிரூபிக்கப்பட வேண்டும். நம் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட பொது ஆட்சியில் இருந்ததும் கருணாநிதியே. அப்போது அவர்களை கை விட்டதும் தமிழ் நாடும் தமிழர்களும்.
எடப்பாடி, மன்னார்குடிக்கு எப்படி முதலைமைச்சரோ அதே போல கருணாநிதி அவரது குடும்பத்துக்கு முதலைமைச்சர்! இந்தத் துரோகிகளால் தான் தமிழன் தலை குனிந்து நிற்கிறான்!
திரு. கருணாநிதி இதற்கு பதில் கூறவில்லையே. ஒரு வேளை உண்மையாக இருக்குமோ.?
கருணாநிதி இனி பதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஜெயலலிதாவுக்கு எப்படி தெய்வம் நின்று கொன்றதோ அதே போல கருணாநிதிக்கும் இப்போது தெய்வம் தனது வேலையை செய்து கொண்டிருக்கிறது! கடைசி காலம் …….பாவம்! அதற்குத்தான் இருக்கும் போது நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள்!
இன்றைய செய்தியில் கருணாநிதிக்காக மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது– உண்மையை ஒரு நாடு நிலை வாதி தான் தெரிவிக்கவேண்டும்.