“அட.. சுந்தர் பிச்சை நம்ம ஆளுப்பா.. எங்களுக்கு தெரியாதா அவரைப்பற்றி..? நீ என்னத்த புதுசா சொல்லிடப்போற.? போங்க தம்பி போய் வேற ஏதாச்சும் தெரியாத மேட்டர் இருந்தா கொண்டு வா.!” என்று முன்கூட்டியே எதையும் கணித்து விடாதீர். சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை என்பது வெளிப்படை.!
சுந்தர் பிச்சை பற்றி அப்படி உங்களுக்கு என்னத்தெரியும்..? தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர், அம்மா – லட்சுமி, அப்பா – ரகுநாத பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ – இது எல்லோருக்குமே தெரியுமே..!! அவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட இதையெல்லாம் சொல்லி விடும்.
ஏன் மறைக்கப்படுகிறது.? ஆனால், எல்லாம் அறிந்த விக்கிப்பீடியா கூட அறியாத சிலசுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. சுந்தர் பிச்சை பற்றிய பல விடயங்கள் ஏன் மறைக்கப்படுகிறது.? ஏன் பிரபலமாக்கப்படுவதில்லை – அவர் ஒரு தமிழர் என்பதாலே..? தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதாலோ.? – தெரியவில்லை.! அதையெல்லாம் வெளிக்கொணரும் ‘சுந்தர் பிச்சை ஸ்பெஷல்’ தொகுப்பே இது.!
பழக்கம் ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.
ஸ்கூட்டர் வாங்க ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.
வகுப்புத்தோழி ஒரு இரசாயன பொறியாளர் ஆன சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐஐடி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத்தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இளம் சுந்தர் பிச்சையிடம் ஒரு மின் பொறியாளராக தன் வேலையில் சந்தித்த சவால்களை பற்றி இளம் சுந்தர் பிச்சையிடம் பேசியதின் மூலம் தான் தன் மகனுக்கு தொழில்நுட்பம் மீது ஆர்வம் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சையின் தந்தை நம்புகிறார்.
அசாதாரண பரிசு சுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை டயல் செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.!
கிரிக்கெட் கேப்டன் ஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் என அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார்.
மெக்கன்சி & கம்பெனி கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார்.
ஈடுபாடு 2004-ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-க்கான தயாரிப்பு மேலாண்மையாளராக இணைந்த்தில் இருந்து சுந்தர் பிச்சை கூகுள் ட்ரைவ்-தனில் மிக ஈடுபாடோடு இருந்தார் உடன் ஜிமெயில் மற்றும் கோகுல் மேப்ஸ்-ஐயும் மேற்பார்வையிடுவாராம். இப்போது கூகுள் தேடல், விளம்பரங்கள், வரைபடங்கள், கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவைகள் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரசியல் மற்றும் நாடகம் சுந்தர் பிச்சை எப்போதுமே கூகுள் நிறுவனத்தில் நிகழும் அரசியல் மற்றும் நாடகங்களில் இருந்து வெளியே தங்கி இருக்கும் திறமை பெற்றவர் ஆவார்.
gizbot.com
நம்ம ஊரு தமிழங்க எவரெஸ்ட் மலை ஏறினாங்களே அவங்க பேரா பள்ளிப் பாடப்புத்தகத்திலிருக்கு? அப்படித்தான் இதுவும்!
ஆ ஊ நா தமிழன் என்பதனால் என்று முடிப்பது, அறிவிலி தனமாகாது ! எது நடந்தாலும் தனக்கு சாதகமா பயன் படித்திக்கிறது என்பது …. வெக்கங்கெடட செயல் ….
தமிழன் தமிழன்னு சொல்லாமே வங்காளின்னா சொல்லணும்??? தமிழன்னு சொன்ன உனக்கு ஏன்டா கசப்பா இருக்கு??? தமிழன்னு சொல்ல நான் பெருமை படறேன் ! நான் தமிழன்டா!!!