இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக The Express Tribune செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை பாக்கிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க தயாரிப்பு விமானங்களான இவை, மிகவும் சக்திவாய்ந்தவை. 3500 பவுண்ட் நிறையுடன் 50 ஆயிரம் அடி உயரத்தில் 18 மணி நேரம் பயணிக்க கூடியவை.
அத்துடன், எதிரிகளின் இலக்கினை துல்லியமாக தாக்க கூடிய வல்லமை படைத்தவை. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாக்கிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அமெரிக்காவிடம் இருந்து இந்தியா குறித்த விமானங்களை கொள்வனவு செய்வதை பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு குறித்த விமானங்களை வழங்குவதன் மூலம் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்களை அமெரிக்காவுக்கு எடுத்து கூற வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் உத்திரபிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய பிரதமர் மோடி பாக்கிஸ்தானுக்கு எதிராக விமர்சனம் செய்திருந்தார்.
பாக்கிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரமே அவரின் இந்த பாரிய வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதாக The Express Tribune வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் வெற்றி இந்தியா – பாக்கிஸ்தான் எதிர்ப்பு நடவடிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும். எனவே, ஆளில்லா விமானங்களை இந்தியா, பாக்கிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் இந்த நடவடிக்கை பாக்கிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் என The Express Tribune வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com