ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.
ஜெனிவா ஐ. நா .மன்றத்தின் பக்க அமர்வில் கலந்துகொண்டு இன்று (16.03.2017 ) தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கை அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத அடக்குமுறைகள் தொடர்பாகவும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் உரையாற்றியிருந்தார்.
கணிசமான வெளி நாட்டு பிரதி நிதிகள் கலந்து கொண்ட இப்பக்க அமர்வில் தமிழர்களின் கலாச்சார உடையில் தமிழில் உரையாற்றியமை அங்கு இருந்த பலரையும் பெரும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவது குறித்தும் இதன்போது உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/aLGKL9leJNo






-http://www.tamilwin.com

























வாழ்த்துக்கள் நண்பா! சின்னத்திரையில் வீரப்பனைப் பற்றி அருமையான தொடரை எடுத்தீர்கள்! தொடர்க தங்களின் பணி!
இவர் இயக்குனர் கௌதமன் இல்லை; காலம் நமக்குத் தந்த வீரத்திற்கும் தன் மானத்திற்கும் போரில் தன் குடும்பத்தையே தியாகம் செய்த பிரபாகரனின் தம்பி – சின்ன பிரபாகரன்.