மீனவர் கொலை விவகாரம்! இந்தியாவிடம் வாங்கிக் கட்டிய இலங்கை!

fishermen4-07தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட, மீனவர்கள் பிரச்சினை குறித்து, இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றில் தெரிவித்தார்.

கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர் ஒருவர், சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மிகப் பெரிய போராட்டங்கள் நடந்த நிலையில், தாங்கள் சுடவில்லை என, இலங்கை கடற்படை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எந்த சூழ்நிலையிலும் இந்திய மீனவர்கள் மீது ஆயுதத்தை பிரயோகிக்க, இலங்கை கடற்படைக்கு அதிகாரம் இல்லை என்பதை, இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.

இந்த விவகாரத்தில், நம்முடைய முழு அதிருப்தியையும், கண்டனத்தையும், கவலையையும், இலங்கைக்கு தெரிவித்துள்ளோம்.

இது தொடர்பாக, இலங்கை அரசுடன், பிரதமர் மோடியும், நானும் பேசியுள்ளோம்.

சமீபத்தில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது, இந்தியாவின் கவலையை, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

தமிழக மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையில், மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது.

இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்தும், இலங்கை அரசுடன் பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

– Dina Malar

TAGS: