டெல்லி : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இளைஞர்கள் பெண்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவளித்தனர்.
வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் , பெண்கள் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அரை நிர்வாண கோலத்திலும், நாமம் பூசிக் கொண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கண்டு கொள்ளாத பாஜக
தொடர்ந்து 6 நாட்களாக பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு பிரதிநிதிகள் யாரும் இன்று வரை சென்று பார்த்து அவர்களது கோரிக்கை குறித்து பேசவில்லை. போலீஸ்காரர்கள்தான் அவர்களிடம் தொடர்ந்து பேசி இடத்தை காலி செய்யுமாறு கேட்கின்றனர்.
தொடர் போராட்டம்
இந்நிலையில், முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என்ற கோஷத்தோடு விவசாயிகள் யாரும் அந்த இடத்தை விட்டு அகலாமல் கட்டிய வேட்டியை தரையில் விரித்து படுத்து ஒரு பிச்சைக்காரர்கள் போல் உண்ண உணவின்றி தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பசியாற்றி..
உலகத்திற்கு சோறு போடும் உழவர்களின் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாத நிலையில், இளம் ஆண்களும், பெண்களும் என சிலர் அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி, சமைத்த உணவை பெரிய பாத்திரங்களில் கட்டிக் கொண்டு போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று உழவர்களுக்கு கொடுத்து வயிற்றுப் பசியை ஆற்றினர்.
உழவர்களுக்கு நன்றி..
தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த 50 எம்பிகளும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை என்ற நிலையில், இளைஞர்களும் பெண்களும் உணவளித்து ஆதரவளித்திருப்பது சோர்ந்திருந்த விவசாயிகளை நெகிழச் செய்துள்ளது.
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!