நான் ஹீரோவின் தம்பி என்று சொல்லாமலே போராடி ஜெயித்த நடிகர் யார் தெரியுமா?

Daniel-Balajiடேனியல் பாலாஜி என்பவர் அபார திறமைசாலி வளர்ந்து வரும் அற்புதமான நடிகர். தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு மிரட்டி வருபவர்.

பொல்லாதவன் படத்தில் தனுஷை விட இவர் அதிகமாகப் பேசப்பட்டவர். ஹீரோ வாய்ப்பை நாசுக்காக மறுத்து வரும் புத்திசாலி நடிகர்.

சூட்டிங் ஸ்பாட்டில் மிக எளிமையாக இருப்பார். கேரவன் கொடு,ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கொடு என்றெல்லாம் அடம் பிடிக்கும் டைப் அல்ல.

அதே போல டேனியல் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் பெற்றவர்.

இப்படி நிறைய கூறப்பட்ட டேனியல் பற்றி, யாரும் அறியாத இன்னொரு பக்கம் இருக்கிறது.

அதுதான் சோகங்கள் நிறைந்த பக்கம். டேனியல் நடிகர் முரளியின் சொந்தத் தம்பி ஆவார்.

ஆனால் அம்மா வேறு. முரளி அப்பா சித்தலிங்கையா கன்னடப் படவுலகில் பெரிய இயக்குனராக,தயாரிப்பளாரக இருந்தவர்.

அவருக்கு அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவயின் மகன் முரளி. இளைய மனைவியின் மகன் தான் டேனியல் பாலாஜி.

தமிழ் திரையுலகில் அண்ணன் முரளியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் முரளியின் தம்பி என்று கூட சொல்லி வாய்ப்பு கேட்காமல் தன்னுடைய சொந்த முயற்சியால் நடிகரானவர் தான் டேனியல்.

டேனியல், தன் அண்ணன் முரளி மரணம் அடையும் வரை யாரிடமும் நான் முரளியின் தம்பி என்று சொல்லிக் கொண்டதே இல்லையாம்..

பல கஷ்டங்கள், பசி பட்டினியோடு தனக்கென்று உள்ள வாய்ப்புகளை தேடி, இன்று நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்து தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

-manithan.com