மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப்புலிகளின் கைகூலிகளும் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்ககூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அண்மையில் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து ஊடகவியலாளர்களிடத்தில் கருத்துரைத்த அவர்,
இந்தக் கொலையை ஏன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், கைக்கூலிகளும் செய்திருக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் தமிழக மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததுடன், இது குறித்து மத்திய மாநில அரசாங்கங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்தவரும் சூழலில் எச். ராஜாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இலங்கை கடல் எல்லைக்குள் நாங்கள் நுழையவில்லை என்றும், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார்கள் என மீனவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com