பசு வதையில் ஈடுபடுவோருக்கு தூக்கு! முதல்வர் அதிரடி

cowசத்தீஸ்கர் மாநிலத்தில் பசு வதையல் ஈடுபடும் நபர்களை தூக்கலிலிடுவோம் என அம்மாநில முதல்வர் ரமண் சிங் அதிரடியாக பேட்டியளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு, காளை, எருமை மற்றும் கன்றுக் குட்டிகளை இறைச்சிக்காக கொல்வது, அந்த இறைச்சியை வைத்திருப்பது, இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு தடை உள்ளது.

அதனைமீறி, பசு வதையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக மேலும் கடுமையான நிலைப்பாட்டை அரசு எடுக்குமா? என்று முதல்வர் ரமண் சிங்கிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதா? இல்லையென்றே கருதுகிறேன். அதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களை தூக்கிலிடுவோம் என் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதே சமயம் குஜராத்தில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது நினைவுக் கூரதக்கது.

-http://news.lankasri.com

TAGS: