மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயலுவோம்: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பெண்கள்

tasmac-shopகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே டாஸ்டாக் கடை உள்ளது. இந்தக் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் கடந்த ஐந்து வருடமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகு மேற்படி உள்ள கடையில் குடிமகன்கள் கூட்டம் அதிகமானது.

ஏற்கனவே பேருந்து நிலையத்தில் பெண்கள் நடமாட முடியவில்லை. இப்போது குடிகாரர்களின் கூட்டம் அதிகமானதால் தொந்தரவு தாங்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு பைக்கில் வந்த வாலிபர் மூதாட்டி ஒருவரின் மேல் மோதியதில் அவர் உயிரிழந்தார். பள்ளிச் செல்லும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள் தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவிகள் மீது கல்வீசி தொந்தரவு செய்துள்ளனர்.

நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறிய போராட்டத்தில் கலந்து கொண்ட செல்வராணி என்ற இளம்பெண், கடையை மூடவில்லை என்றால் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்திய அவர்கள், டாஸ்மாக் கடை முன்பு சாமியானா பந்தல் போட்டு உணவு சமைக்கும் போராட்டமும் நடத்தினர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

-எஸ்.பி.சேகர்

-http://www.nakkheeran.in

TAGS: