இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த சந்தர் மேக்வால் தன் மகளுக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த கிராமத்தில் தலித் இன மக்கள் மேளம் மட்டும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேண்டு வாத்தியங்கள் உயர்சாதியினருக்கானது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆனால் இந்த கட்டுபாட்டினை மீறி சந்தர் மேக்வால் மணமகன் அழைப்பிற்கு பேண்டு வாத்தியங்களை பயன்படுத்தி, பொலிசாரின் பாதுகாப்போடு திருமணத்தினை நடத்தினார்.
இதனால் உயர் சாதியினர் தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெயினை கொட்டி கொடூர செயலை செய்துள்ளனர்.
இதை அறிந்த கலெக்டர் டி வி சிங் மற்றும் எஸ் பி மீனா ஆகியோர் அந்த கிணற்றினை ஆய்வு செய்து, உயர் சாதியின மக்களிடம் பேசி சமாதானம் படுத்தியுள்ளார். மேலும் இரண்டு போர்வெல் போடவும் உத்தரவிட்டுள்ளார்.
-lankasri.com
இது சமாதானம் பேச வேண்டிய விஷயம் அல்ல! ஜெயிலில் போட வேண்டிய விஷயம்! சமாதானம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்!
அந்த ஜாதி வெறியனுக்கு இவ்வுலகில் வாழ தகுதி இல்லை. நான் சொல்வது மிகவும் கடினமானதாக இருந்தாலும் சிலசமயங்களில் நல்லது நடக்க கெட்டது போல் தோன்றும் நியாயம் நடக்க வேண்டும். இன்று சீனா அமெரிக்காவையே கடனாளி ஆக்கி இன்றைய நிலை அடைய 30 ஆண்டுகளே தேவை பட்டது. ஆனால் அதற்க்கு அடிகோல் நாட்டியது மாவோ சி துங் . பல தலைகள் உருண்டன- இல்லை என்று சொல்லவில்லை– என்ன செய்வது ? நல்லது செய்து பாருங்கள் நம் தலை மேல் மிளகாய் அரைப்பான்கள்.– அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்கள் என்று சொல்வார்கள்.நாடு முன்னேற வேண்டும் .-அநியாயங்கள் நடக்கவிடாமல் தடுக்கப்பட வேண்டும் நடக்குமா இந்தியாவில்? நடக்காது- காரணம் அவ்வளவு ஜாதி வெறி -ஊழல் -அங்கு வேலியே பயிரை மேயும் நிலை. அந்த ஈன செயலை செய்தவன் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை கசை அடிகொடுக்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் உயர் ஜாதி வெறியர்கள் மிகவும் அதிகமே–காரணம் இந்த வெறியர்கள் சட்டத்தின் பிடிக்கு டாடா சொல்லிவிடும் நிலை.
உலகிலேயே ஜாதிக்கு அத்தாட்சிப்பத்திரம் கொடுக்கும் கேவலம் இந்த இந்தியாவில் மாத்திரமே ….இந்த அளவில் இங்கு ஜாதி புரை ஓடி உள்ளது ..அனால் இந்தியர்களுக்கு ..ஐரோப்பிய வெள்ளைத்தோல்களில் மறந்தும் ஜாதி பார்க்க மாடடார்கள் …அங்கிள் ..ஆண்ட்டி என்று உறவு கொண்டாடி ..மகிழ்வார்கள் தூ
சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் கல்யாணமாலை பார்த்தால் கேள்விப்படாத ஜாதிகளையும் கேள்விப்படலாம்– கேடு கெட்ட ஈனங்கள். என்ன ஜென்மங்கள்? சூடு சொரணை இல்லாத மட தமிழர்கள். வெட்கமில்லாத அறிவிலிகள்.