ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு கொடுங்க.. தமிழக அரசுக்கு நீதிபதி பலே உத்தரவு

keezhadi-sivagangai2சென்னை: மருத்துவ கல்லூரிகளின் மேல் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்காததை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் டாக்டர் காமராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு இடஒதுக்கீட்டை கேட்டு பெறாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியதால் தகுதி உள்ளவர் எம்.டி., எம்.எஸ். சேர முடியவில்லை.

மேலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதேபோல் விதிகளை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசின் அபராதத்தை சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கும், மருத்துவ கவுன்சிலுக்கு விதித்த ரூ.1 கோடியை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்திற்கும் பயன்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

tamil.oneindia.com

TAGS: