நாளை இந்த நிலை நமக்கும் வரும்! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

waterநீரின்றி அமையாது உலகு! இது பழமொழி. ஆனால் தற்போது உலகளவில் நிலவும் தண்ணீர் பற்றாகுறையால் நீருக்கு தவிக்குது உலகு என தான் சொல்ல தோன்றுகிறது.

இப்படி தண்ணீரின்றி தவிக்கும் ஒரு ஊர் தான் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் ஆகும்.

அங்கு தண்ணீரை மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர்கள் கண்களால் பார்க்க முடிகிறது. அது தான் கிணற்றில் இறங்கி மண் தோண்டி தண்ணீர் எடுக்கும் முறையாகும். இதை செய்வதற்கென்றே சம்பளத்துக்கு வேலையாட்கள் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் சிரங்காயி என்னும் முதிய பெண். பார்க்க 70லிருந்து 80 வயது வரை இருக்கும் தோற்றத்தில் இருக்கும் அவருக்கு தன் சரியான வயது கூட தெரியவில்லை.

கண்டாங்கி சேலை கட்டியுள்ள அந்த முதிய பெண்மணி கூறுகையில், எனக்கு திருமணமாகி 60 வருடங்கள் இருக்கும். அதிலிருந்து இந்த வேலை தான் செய்து வருகிறேன் என்கிறார்.

அருகில் இருக்கும் அவர் மகன் தங்கவேல் இதை பற்றி விரிவாக கூறுகிறார். நான் கடந்த 20 வருடங்களாக இந்த கிணறு வெட்டும் வேலை தான் செய்து வருகிறேன்.

அப்போதெல்லாம் 10 அடி வெட்டினாலே தண்ணீர் வரும். இப்போது 70 அடி வெட்டினால் தான் தண்ணீர் வருகிறது என கூறுகிறார் இவர்.

தான் தற்போது வெட்டும் கிணற்றின் அகலம் 25 அடி என கூறும் அவர், இடம் பெரிதாக இருந்தால் பெரிய அளவில் கிணறு வெட்டமுடியும் என கூறுகிறார்.

பெரிய அகலமான கிணறு என்றால் தண்ணீர் நிறைய நிற்கும் என கூறும் தங்கவேல், ஒரு நாளைக்கு 350 ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும் அது பத்தவில்லை எனவும் கூறுகிறார்.

பெரிய கிணறு என்றால் அடிக்கு 25 ரூபாய் என கூலி கேட்போம் என்றும் முதலில் ஜேசிபி எந்திரம் மூலம் கிணறு தோண்டுவோம் எனவும் பின்னர் கடப்பாறை கொண்டு கற்களை உடைப்போம் என தங்கவேல் கூறுகிறார்.

இன்னொரு இளம் பெண் கூறுகையில், இந்த பகுதி முழுவதும் வெயில் உக்கிரமாக இருக்கும். மிகவும் கஷ்டப்பட்டே இதை செய்கிறோம் என கூறும் அவர் குழாய் தண்ணீர் சிறிதளவு தினமும் 2 முறை விடுவார்கள் என கூறுகிறார். இப்படி தண்ணீர் பஞ்சம் இங்குமட்டுமில்லாமல் உலகின் பல இடங்களில் நிலவுகிறது.

நாளை நாம் வாழும் இடங்களுக்கும் இந்த பிரச்சனை வரலாம். எல்லோரும் முழித்து கொள்ள வேண்டிய தருணமிது!

-http://news.lankasri.com

TAGS: