தமிழக மீனவர்கள் தொடர்பில் ஆராய்கிறார் சுஸ்மா

susma_swaraj_001தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாளை புதுடில்லியில் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்படுகின்றமை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களின் விடுதலையில் தலையிடுமாறு பாண்டிச்சேரியின் முதல்வர் வி. நாராயணசாமி, இந்திய வெளியுறவு அமைச்சரை கோரியுள்ளார்.

-tamilwin.com

TAGS: