சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் பேசியுள்ளார். அவர் கூறுவதை பார்த்தால் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.
ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. முதல்நாள் பேசிய அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என்றார். அரசியல்வாதிகளை முதலைகள் என்றும் கூறினார்.
நான் தமிழன்தான்
இந்த நிலையில் ரஜினி தமிழரா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்துவந்தனர். பாஜகவின் சுப்ரமணியசுவாமியும் கூட மராத்தியர் என்று ரஜினியை விமர்ச்சித்திருந்தார். இந்த நிலையில் இன்று பேசிய ரஜினி, வேறு மாநிலத்தில் இருந்து வந்த என்னை தமிழனாக மாற்றியது நீங்கள்தான் என பழியைத் தூக்கி ரசிகர்கள் மீது போட்டார்.
எதிர்ப்பே மூலதனம்
அரசியல் குறித்து நான் அன்மையில் பேசியது பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம் என்றார். அது நாம் வளர்வதற்கான உரம் என்று கூறியுள்ளார்.
போருக்கு தயாராகுங்க
அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. அனைவருக்கும் வேலை உள்ளது. ஊருக்கு சென்று தொடர்ந்து வேலையை பாருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று உணர்த்தியுள்ளார்.
கீழ்தரமான விமர்சனம்
சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்கிறார்கள் எனவும் என்று வருத்தம் தெரிவித்தார்.
நான் நினைப்பது தவறா?
தமிழக மக்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள். தமிழக மக்கள் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா? என்றும் கேட்டுள்ளார் ரஜினி.
எல்லோரும் இருந்தும் எதுவும் சரியில்லை
மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. இத்தனை பேரும் இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் நிலவரம் சரியில்லை. ஜனநாயகம் சீர்குலைந்து கிடக்கிறது. அதற்கு மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும் என்றும் கூறியுள்ளார்.
வேலைகளை கவனியுங்கள்
ரஜினி பேசிய பேச்சைப் பார்த்தால், என்னவோ இவரை விட்டால் தமிழகத்தைக் காக்க ஆளை இல்லை என்பது போல இருக்கிறதே என்று தமிழ் மக்கள் காலையிலிருந்தே ஆச்சரியமாக யோசித்துக் கொண்டுள்ளனர். ரஜினியே சொன்னது போல போய் அவரவர் வேலையைப் பார்ப்போம். “போர்” வரும் போது பார்த்துக் கொள்ளலாம்!
காடுவாவாஎன்றுஅழைக்குதுவீடுபோபோ
எனறுவிறட்டுது,அரிசிவெந்தால் சோறு
மாபெறும் தத்துவமேதை ரஜனி,உச்சநீதிமன்
முன்னாள்நீதிபதி மர்க்கண்டேயகட்ஜூ
தன்கருத்தைதெரிவித்துள்ளார்,பாலிவுட்
நடிகர்அமிதாப்பச்சான் போன்றுரஜினிகாந்து
மண்டையிலும்ஒன்றும்இல்லை என்று
குறிப்பிட்டுள்ளார்,மகள்கணவரைவிவாகரத்து,
மறுமகன் மன்மதனாக உலா வருவதாக
ஊடகசெய்திகள்அரசியலுக்குவரும்முன்
வீட்டை சுத்தப்படுத்து!
நல்லதை சொன்னால் தான் இன பாகுபாட்டை பேசியே தமிழ் நாடு மக்கள் நாசமாகி விடுகின்றனர்…. எத்தனை காமராஜர் வந்தாலும் இந்த முட்டாள் தமிழ்நாட்டு காரர்களை வழி நடத்துவது சிரமமே.
கருணாநிதி நல்லதைத்தான் சொன்னார். ஜெயலலிதாவும் நல்லதைத்தான் சொன்னார். இப்போது ரஜினியும் நல்லதைதான் சொல்லுகிறார். அப்போது கூட காமராஜரைத் தானே உங்களால் உதாரணம் காட்ட முடிந்தது! அது தான் தமிழனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்!
அப்படி அல்ல நண்பரே. கருணாநிதி , MGR , ஜெயலலிதா யாவரும் நல்லது கூறி இருந்தாலும் ஊழலில் வாழ்ந்தவர்கள். காமராஜர் நேர்மையின் சின்னமாக இருந்தவர். அதனால் தான் அவரை யாம் குறிப்பிட்டோம். அந்த தமிழரை தவிர மற்றவர் பெயர் அளவிலேயே தமிழராக உள்ளனர். நேர்மையோ, கடமையோ, பணபாடு உள்ள தமிழனை தமிழ் நாட்டில் காண்பதே அரிதாகி விட்டது. நண்பரே.
ரஜினியை நமது பிரதமர் நஜிப்புடன் ஒப்பிடுகையில் ரஜினி எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.
ரஜினி வாயளவில்தான் விமர்சனம் செய்யும் தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என்கிறார்.
ஆனால் நமது பிரதமர் நஜிப் தன்னை விமர்சனம் செய்பவர்களை தனது முன்னிலையிலே குண்டர்களை ஏவி விட்டு அறைய சொல்கிறார்.
பொதுவாழ்க்கை என்று வந்து விட்டால் ஆதரவான விமர்சனங்களும் எதிரான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்யும்.
தமக்கு ஆதரவான விமர்சனங்களை கண்டு மகிழ்ச்சி அடைவதும், தமக்கு எதிரான விமர்சனம் செய்பவர்களை வார்த்தையால் விளாசுவதும்-குண்டர்களை ஏவிவிட்டு உதைப்பதும் புத்தி பேதலித்தவன் செய்யும் வேலை.
அதனால் ரஜினியோ நஜிப்போ இருவருமே புத்தி பேதலித்தவர்கள்தான் என்பதை இருவருமே தனது செய்கையால் நிரூபித்து விட்டார்கள்.
தமிழனை தமிழ் ஆழ வேண்டும் ..இதனை ஆதரிக்கிறேன் . அனால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது ..இந்தியாவை ஆள்வது தமிழனா ? எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் நன்றா வாங்கி தின்றுபுட்டு அவர்களையே திட்டுனே பரதேசி கூட்டம் ஒன்னு இருக்கு .. அதனுடனே இப்போ ரஜினியை தாக்குது ..யார் போட்ட எலும்பு துண்டுக்கு வல்லதும் நாய்களோ தெரியல