சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் திட்டவட்டமாக கூறினார். மேலும், ரஜினி வந்தால் என்னென்ன செய்வேன் என்று சொல்கிறாரோ அதனை தாங்களே செய்து கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளைக்காரனை ஏன் விரட்டினீர்கள்..
44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த நீங்கள் பச்சைத் தமிழன் என்றால், பல நூறு ஆண்டுகள் இந்த ஆண்டை ஆண்டு வெள்ளைக்காரனை ஏன் விரட்டினீர்கள். நீண்ட காலமாக மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழர்கள் மராட்டியர்கள் என்று சொல்லிவிடுவார்களா?
நடிங்க.. போங்க..
திரைத்துறை, கலைத் துறை என எதற்கு வேண்டுமானாலும் வாங்க, நடிங்க, சம்பாதிங்க, போங்க, அவ்வளவுதான். நாட்டை ஆளும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. வருவோர் போவோரிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு அடிமையாக வாழ முடியாது.
காவிரியில் தண்ணீர் இல்லை.
ஜனநாயகம் என்ன ஜனநாயகம். காவிரியில் தண்ணீர் இல்லை என்று விரட்டும் போது எங்கே போனது ஜனநாயகம். தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.
ஹா ஹா ஹா புலம்பிக்கொண்டே இருங்கடா
ரஜினி அரசியலுக்கு வர ஆசைப்படடாள் வரட்டுமே ! தமிழ் மக்கள் ஏன் ஒட்டு போடுறீங்க ? மக்களை திறுத்தாத வரைக்கும் , ஏமாற்றுபவன் ஏமாத்திரிகிடத்தே இருப்பான் ….
வாழவந்தவனையெல்லாம் வணக்கத்துக்குரியவன் என்று நினைத்தோமே அதனால் ஏற்பட்ட புலம்பல். உண்மை தான். நக்கிப் பிழைப்பவனுக்கு இப்போது கொஞ்சம் திமிர் என்பது புரிகிறது. இருங்கடா! தமிழன் யார் என்பது சிக்கிரம் புரிந்து கொள்ளுவீர்கள்!
ரஜினி அரசியலுக்கு வருவது அவரின் விருப்பம். அவரை அனாவசியமாக தாக்குவது அநாகரீகம் — அவரை ஆதரிக்காவிட்டாலும் தாக்குவது சரி இல்லை என்றே நான் நினைக்கிறேன். தமிழுக்காக தமிழர்களுக்காக தமிழ் நாட்டுக்காக உண்மையாக யார் நல்லது செய்வாரோ அவரே பொருத்தமானவர். இப்போது அண்ணா தி மு க எத்தனை பிரிவுகளாக இருக்கிறது? அதில் தமிழர்கள் இல்லையா? இருந்தும் என்ன நடக்கிறது ? தமிழ் நாடு ஏன் நாறிப்போய் கிடக்கிறது? தொலைக்காட்சி செய்திகளை பார்த்தால் அங்கு இப்படியும் ஆட்சியா என்று என்னும் அளவுக்கு இருக்கிறது– எங்கே தேடுவேன் அந்த நல்லவனை எங்கே தேடுவேன்?
தமிழர்களாகிய நாம் வீராவேசமாக பேசுவோம். அப்புறம், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, ரஜினிகாந்த்,என வாலை பிடித்துக் கொண்டு அலைவோம். அய்யோடா, நாங்களாவது திருந்துவதாவது, வேற வேலை இருந்தா பாருங்கடி!
தம்பி சீமான் அவர்களே! உங்கள் நாட்டில் மட்டும் தான் இந்த வகை ‘தமிழ் அறிஞர்கள்’ நிறைந்துள்ளனர் என்று நினைக்காதீர்கள். எங்கள் மலேசிய நாட்டில் அதைவிட மோசம். எங்கள் நாட்டில் வாழும் பெருவாரியான மூவினங்களில் மலாய் இனமும் ஒன்று. மலாய்க்காரனை இங்குள்ள பெருவாரியான ‘தமிழ் அறிஞர்கர்’ , அவர்களை ‘நாட்டுக்காரன்’ என்றும், சுருக்கமாக ‘நாட்டான்’ என்றும் அழைப்பார்கள். அவன் ‘நாட்டுக்காரன்’ என்றால், இந்த ‘அறிவு ஜீவி’ தமிழன் யார்? ‘காட்டுக்காரன்’ தானே. இவனுக்கும் ஒரு ஓட்டுதான் அந்த அல்தான்துயா நஜிப், மகாதிமிர் போன்ற மலைக்காரர்களுக்கும் ஒரு ஓட்டுதான். ஆனால், இந்த ‘அறிவுக்களஞ்சியங்களான’ மலேசியாத் தமிழர்கள் அவர்களை ‘நாட்டுக்காரன்’ என்பார்கள். (இப்படி சொல்லிவிட்டேன் என்பதற்காக இந்த அறிவாளிகள் என் மீது பாய போகிறார்கள்.)
ஐயா singam அவர்களே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை– நானும் எக்காலத்திலும் யாரவது நாட்டான் நாட்டுக்காரன் என்று சொன்னால் அவர்களை கடிந்து அப்படி என்றால் நாம் காட்டுக்காரனா என்று கேட்டு உள்ளேன்– இவர்களின் மூளை எப்படி வேலை செய்கிறது என்றே தெரிய வில்லை. பிறந்த உரிமையையும் தர்காக்காமல் இப்படி பேசினால் எப்படி?
நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் எடுபடாது. ரஜினியை தாக்குவது தவறு. தமிழ் மக்களுக்கு தமிழர் உணர்வு இல்லாத போது யாரை நொந்து என்ன பயன்– இன்றும் ஜாதி அத்தாட்சி பத்திரம் தேவை படும் தமிழ் நாட்டில் எப்படி ஒற்றுமை இருக்கும்? நாம் தமிழர் நம் தமிழ் என்று பற்று உணர்வு இல்லாத போது வேறு என்ன நடக்கும்? தமிழ் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்ன தமிழ் பேசுகின்றனர்? இதிலிருந்தே தெரிய வேண்டுமே–
தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் பெரும்பாலும் தமிழர்களால் நடத்தப்படுபவை அல்ல, நண்பரே! அதில் பங்கு பெறுபவர்களும் ஒரு சிலரே தமிழர். பாடல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்லாதவரே!
நன்றி! நான் எந்தக்காலத்திலும் ‘நாட்டான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை! நான் அந்தக்காலத்திலேயே “அப்படினா நான் காட்டானா” என்று நினைத்ததினால் வந்த விளைவு அது!
செம்பருத்தியில் முன்பு ஒரு வாசகர் நாட்டை ஆள்கிறேன் என கூத்தாடிகள் தமிழ் நாட்டில் கூத்தடித்தது போதும், இனிமேலாவது கூத்தாடி தொழில் சாரதாவர் நாட்டை ஆழ வேண்டும் என்று கருத்து கூறி இருந்தார்.
தமிழக மக்கள் இனியும் தமிழ் நாட்டை ஆழ கூத்தாடி தொழில் சார்ந்தவர்களை நம்பியிராமல் இருப்பது நல்லது.
சினிமாவுக்கு வாங்க.. நடிங்க.. சம்பாதிங்க.. கூத்தடிங்க.. போங்க.. இது உங்களுக்கும் பொருந்தும் சீமான் அவர்களே .
தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்களா இல்லையா?
MGR , தமிழரா ! ஜெயலலிதா தமிழச்சியா ! இவர்கள் கூத்தாடிகள் தானே ! சிறையில் இருப்பவளின் காலில் விழும் மானங்கெட்ட தமிழன் தானே நீயெல்லாம் ! ரஜினி அரசியலுக்கு வந்தால் உனக்கு உனக்கு என்னடா பயம் ! அவர் கோடி கோடி யாக சம்பாதிப்பது உனக்கு என்னடா வைத்தெரிச்சல் ! அவர் அரசியலுக்கு தானே வருவேன் என்றார் ! முதல்வர் ஆகிவிடுவேன் என்ற சொன்னார்! உங்களுக்குத்தான் பயம் அரசியலில் திருட முடியாதே என்று !
ஆஹா ஆஹா…கூத்தாடி ரஜினியின் காலை வருடுவதில் தான் எத்தனை சுகம்? சுயதரிசனமில்லாத…சுயமரியாதை தெரியாத..சுயநலவாதிகள்…
மணியம் சார்! நீங்கள் தமிழர் இல்லை என்பதால் இப்படித் தமிழர்களைக் கேவலமாகப் பேசுவதில் நியாயமில்லை. ரஜினி கோடி கோடியாய் சம்பாதிப்பதில் தமிழர்கள் பெறாமைப்படுபவர்களாக இருந்தால் இந்த 45 ஆண்டு காலம் தமிழ் நாட்டில் அவர் பிழைப்பு நடத்திருக்க முடியாது. பிரச்சனை அதுவல்ல. கடந்த 50 ஆண்டு காலம் தமிழர் அல்லாத ஆட்சியில் தமிழர்களைக் குடிகாரர்களாகத் தான் ஆண்டவர்கள் தமிழர்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள்! அதனால் அடுத்த ஆட்சி தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான் தமிழர்களாகிய நாங்கள் நினைக்கிறோம். நன்றி!
ஸ்.மானியம் உங்கள் கருத்து அருமை …….
தமிழனை தவிர்த்து மத்தவனை எல்லாம் ஏன்டா நடிக்க உடறிங்க ! நீங்களே நடிக்க வேண்டியதுதானே ! தமிழ் நாட்டு காரனுக்கு சினிமா ! குடி ! அடுக்கு மொழி அரசியல் ! இதை விட்டால் வேறு என்னடா தெரியும் ! தமிழன் , தமிழன் , என்று தமிழனை குடிகாரனாகவும் ,பிச்சைக்காரனாகவும் ஆக்குவதை தவிர உங்களுக்கு வேறு என்ன தெரியும் ! வெளி மாநிலத்து காரன் உங்கள் மாநிலத்தில் சம்பாதித்து அவன் மாநிலத்தில் முதலீடு செய்து அவன் மக்களுக்கு நன்மை செய்கிறான் ! தெரிகிறதா இப்போது நீங்களெல்லாம் வடி கட்டிய முட்டாள்கள் என்று !!!
அது தான் பக்கத்து மாநிலத்துக்கரனுக்கு ஆட்சியைக் கொடுத்து, இப்போது தமிழர்களை குடியும் குடித்தனுமாக அவர்கள் ஆக்கிவிட்டார்கள் என்பதால் தானே தமிழர் ஆட்சி வேண்டும் என்கிறோம். நாங்கள் வடி கட்டிய முட்டாள்கள் மட்டும் அல்ல வழி வழி முட்டாள்கள். அதனை இப்போது தானே நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் சொன்னது அனைத்தும் சரி. நீங்கள் தீர்க்கதரிசி.
நம்மவர்கள் மடையர்களாக இருக்கும் போது யாரையும் குறை கூறுவது சரி அல்ல. நம் முதுகை நாம்தான் துடைக்கவேண்டும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சொல்லிக்கொள்வதில் ஒரு கையாலாகத்தனத்துடன் கூடிய கேவலமான (மாயை) பெருமையோடு தமிழ்நாட்டுத் தமிழன் வாழ்ந்தது ஒரு காலம். அந்தக் காலம் மலையேறிவிட்டது என்று முரசொலித்து எழுந்திரு தமிழா…உன்னால் முடியும் தமிழா..ஆண்ட பரம்பரைக்கு மீண்டும் ஆளத்தெரியாதா என்ன…
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்று இப்போது தமிழன் சொல்லுவதில்லை. பிழைக்கவந்தவன் அதனைச் சொல்லிச் சொல்லி மற்றவர்களையும் அழைக்கிறான்!
ஓ…. தமிழா…. சீமான் போன்ற கழிசடை எல்லாம் அரசியல் என்ற சாக்கடையில் இருந்து தமிழர் வாழ்வை பகடையாக உருட்டுவதை கண்டால் தமிழ்நாடு வளம் பெறுவது அரிதாகி விடுமோ. ஆறு கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் காமராஜரை போன்று அரசியலில் தமிழன் ஒருவன் கூட இல்லையே …. என்ன கொடுமை இறைவா …..
தமிழக அரசியலில் அடுத்தது ரஜினிதான்! – என்று சொல்கிறான் மானங்கெட்ட தொல் திருமாவளவன்.
நண்பனே! ஐம்பது ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதா போன்ற கழிசடைகளைக் கண்டுவிட்டோம்! இப்போது சீமானையும் கண்டுவிடுவோம்!
வேண்டாமே நண்பா. வெள்ளம் வரும்முன் அணைபோடுவதே நல்லது.
அது தான் வெள்ளம் வராதபடி கர்நாடகா, கேரளா, ஆந்திரா – வை அணை போட வைத்து விட்டார்களே அந்தக் கழிசடைகள்! அதனால் இப்போது வெள்ளம் தான் தேவை!
வாங்கடா நொன்னைகளா ,மாலேசியாவில் ஏகபடட பிரச்னை இருக்கு அத பாருங்கடா ,,போயிடுடானுங்க தமிழ்நாட்டுக்கு ,எவண்டா யோக்கியமானவன் ,சொல்லுங்கடா பார்ப்போம் ,உலகத்திலே எவண்டா யோக்கியமானவன் உத்தம புத்திரன் ,,சொல்லுங்கடா பார்ப்போம் ,,அடுத்தவனை குறை சொல்லியே நாசமா போங்கடா ,,உங்க முதுகை திரும்பி பாருங்கடா முதலில் .
ஆமாம் நம்ம பொன்னுரங்கன் நண்டு ரங்கன் ,சிம்பாங் ரங்கம் ஆளையே காணலாம் …டேய் எப்படிடா இருக்க இருக்க ?
என்ன செம்பருத்தி முன்பு மாதிரி சுறு சுறுப்பா இயங்க வில்லையே ,ஏன்னா ஆச்சி ,,,வாசகர்கள் குறைந்து விடடார்களா