காந்தி மரணத்தில் சந்தேகம்: நாலாவது குண்டு எப்படி வந்தது?

gandhi-21இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், காந்தியின் மரணத்தில் மிகப்பெரிய சதி புதைந்து கிடக்கிறது. அதை வெளியில் கொண்டு வர வேண்டும். இதற்காக புதிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

காந்தியின் மரணத்திற்கு நாதுராம் விநாயக் கோட்சேவையும் வி.டி.சாவர்க்கரையும் மட்டும் குறை கூறுவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கூறிய அவர், பழைய பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலும் தனது ஆய்வின்படியும் காந்தியின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்துள்ளது என பத்னிஸ் கூறியுள்ளார்.

ஆனால் கோட்சே சுட்ட துப்பாக்கியில் 7 குண்டுகள் பொருத்தலாம் என்றும் காந்தியை சுட்ட பிறகு அதிலிருந்து 4 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் விசாரணையில் கூறியதாக பத்னிஸ் தெரிவித்துள்ளார்.

அப்படியெனில் காந்தியின் மீது பாய்ந்த அந்த 4-வது குண்டு யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது என்றும் அது குறித்து ஆராய வேண்டும் என்றும் பத்னிஸ் கேட்டுள்ளார்.

காந்தியை கோட்சே தவிர இரண்டாவது நபரும் சுட்டுள்ளாரா? என பத்னிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

-lankasri.com

TAGS: