மாட்டிறைச்சிக்கு தடை: கேரளா, கர்நாடகாவில் எதிர்ப்பு

cowகால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள், காளைகள், எருதுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, நேற்று மட்டும் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் மத்திய அரசின் தடை உத்தரவை கேரளாவில் அமுல்படுத்தப் போவதில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இதேபோன்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டது, எனவே நாங்கள் தடையை அமுல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

-lankasri.com

TAGS: