உண்மையிலே தைரியசாலிதானா? சினிமாவோடு இருக்கட்டும்: அரசியலுக்கு வேண்டாம்

traffic ramaswamyரசிகர்களை சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி காந்த், தமிழ் நாட்டு அரசியல் பற்றி மிகவும் காரசாரமாக பேசியது குறிப்பிடத்தக்கது. அரசியல் சீர்கெட்டுபோயிருப்பதாகவும், மாற்றம் வேண்டும் எனவும் பேசினார்.

இவரது பேச்சுக்கள் அனைத்தும் அரசியலுக்கு வரத்தயார் ஆகிவிட்டதாகவே தெரிந்தது. அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? தனிக்கட்சி தொடங்குவாரா? பாஜகவுடன் இணைவாரா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதனிடையே ரஜினியின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, மக்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நல்ல திறமையுள்ள ஜெயலலிதாவை சாகடித்து விட்டனர். தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சொல்கிறார். மொத்தத்தில், தற்போது இருப்பது மக்களுக்கான அரசே இல்லை.

ரஜினிகாந்த் தைரிய சாலியாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி சினிமாவோடு இருக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றார்.

-lankasri.com

TAGS: