மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளது தமிழக காவல்த்துறை.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை குறித்து தன்னுடைய குரலை உயர்த்துபவர்களின் முதன்மையானவர் திருமுருகன் காந்தி. முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி செய்த போது மெரினா கடற்கரையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முதல் ஐக்கிய நாடுகள் சபை இவரின் ஈழத்துக்கானதும், ஈழ மக்களின் அரசியல், மற்றும் இனப்படுகொலைகள் குறித்து தன்னுடைய குரலை ஓங்கி ஒலித்தவர் திருமுருகன் காந்தி. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பேசிவருகின்றனர்.
அவரின் செயற்பாட்டையும், மக்களுக்குமானதுமான போராட்டங்கள் குறித்து மெரினா முதல் ஐ.நா வரை! யார் இந்த திருமுருகன் காந்தி? என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக ஊடகம் ஒன்று.
-tamilwin.com