இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50) இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார்.
ஷங்கரும், பப்புவும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
பின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல இலவசமாக அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.
அதற்கு, அமரர் ஊர்தி இல்லை என கூறிய நிர்வாகம் சொந்த பணத்தை செலவழித்து தனியார் அமரர் ஊர்தியில் கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.
வெளியே வந்து விசாரித்த போது தனியார் ஊர்திக்கு, 2,500 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பணம் இல்லாததால், மனைவியின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.
மகன் பப்பு பைக்கை ஓட்ட, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.
இதனிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-tamilwin.com
இதுதான் இந்திய பிரதமர் மோடி அரசின் மூன்று ஆண்டுக்கான வெற்றி. மத்திய சுகாதார அமைச்சர் என்ன புடுங்கி கிட்டு இருக்கிறார்.அல்லது மாநில அரசு என்ன புடுங்குது. இதுதான் மக்களுக்கு செய்யும் சேவை.
இதெல்லாம் அவங்களின் விதி என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நூற்றாண்டிலும் இதைப்போன்ற கேவலங்களை கேட்க அங்கு யாரும் கிடையாது.