டார்ஜிலிங் பகுதியில் அமைதி தன்மை மீட்டெடுக்கப்படும்-மம்தா பாணர்ஜி

darjeeling-2கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டார்ஜிலிங் பகுதியில் அசாதரமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கோர்கா ஜன முக்தி மோர்ச்சாவினர் போராட்டத்தால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாயினர். ஓட்டல்கள் மூடப்பட்டது. கட்டுபான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பாணர்ஜி கூறியதாவது:

டார்ஜிலிங் பகுதியில் அமைதி தன்மை மீட்டெடுக்கப்படும். நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். நிலைமை குறித்து ஆலோசிக்க டிபியுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: