இன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்.. செம்மஞ்சேரியில் விழிப்புணர்வுப் பேரணி

child-labourசென்னை: இன்று ஜூன் 12, உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம். இதையொட்டி AWARE அமைப்பின் சார்பில் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இந்த அவலம் இன்றும் உலகளவில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு

பள்ளிக்கூடம்தான் கட்ட முடியலை, குறைந்தது கல்வியின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கிய அமைப்புதான் எங்கள் AWARE.

இலவச வகுப்புகள்

வெறும் விழிப்புணர்வு மட்டும் செய்தால் போதாது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு பயனுள்ள செயலையும் செய்து வருகிறோம். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் இலவச வகுப்புகளையும் எடுத்து பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.

போட்டிகள்

போட்டியின் முடிவுகளை பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களுடன் கலந்துரையாடலும் செய்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு கல்வியின்மேல் அதிக ஆர்வம் வரும் என்பதில் ஐயமில்லை.

சிறப்புத் திட்டங்கள்

தேவை அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக் குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி

இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று சிறுவர் மகிழ் செம்மஞ்சேரி என்ற தலைப்பில் ஒரு நடை பயணம் மற்றும் நடனத்துடன் கூடிய விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தன்னார்வலர்களும், செம்மஞ்சேரி பகுதி குழந்தைகளும் கலந்து கொண்டனர். செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர் இதை நிறைவு செய்தார்.

tamil.oneindia.com

TAGS: