தமிழகத்தில் சில நாட்களாக பிளாஸ்டிக் அரிசி என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.
வேக வைத்த அரிசியை உருண்டையாக பிடித்து, தரையில் பந்து போன்று அடித்து விளையாடும் வீடியோ காட்சிகளும் வெளியாகாமல் இல்லை.
இதனால் நாம் சாப்பிடும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது.
இது உடலுக்கு தீங்கு, இதனால் புற்று நோய் கூட வரும் என்ற தகவல் பரவியது. இந்த தகவலால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
பிளாஸ்டிக் அரிசி எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து கூட செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஆராய்ச்சியாளர் பிச்சை முத்து சுதாகர், பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தியே, நன்கு வேக வைத்து உலர்ந்த சோற்றினை கையால் நன்கு பிசையும் போது அதில் உள்ள பசைத் தன்மையோடு கூடிய ஸ்டார்ச் மூலக்கூறுகள் நெருக்கமாக பிணைக்கப்பட்டு நன்கு பந்து போல் இறுக்கமாகி விடும்.
இது ஏறத்தாழ கொஞ்சம் ஈரப்பதமுள்ள களிமண்ணை பந்து போல் உருட்டுவதற்கு சமம்.
வெறும் களி மண்ணை ஓங்கி அடித்தால் தரையில் ஒட்டிக் கொள்ளும், ஆனால் கொஞ்சம் களிமண்ணை எடுத்து கையால் நன்கு பிசைந்து உருட்டும் போது அதில் மணல் துகள்கள் நெருக்கமாக பிணைக்கப்பட்டு இறுக ஆரம்பித்து விடும். இது பந்து போல செயல்படும்.
ஆகவே உலர்ந்த எல்லா அரிசி சாதமும் நன்கு பிசைந்து உருட்டி தரையில் போட்டால் பந்து போல் குதிக்கும். இதனை பிளாஸ்டிக் அரிசி என போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
மேலும் இது தனியார் விளம்பர நிறுவனத்தின் அரிசியை விளம்பரப்படுத்தவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-lankasri.com