சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.
நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சர்வேயில் கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதுகுறித்த பார்வை:
சம பலத்தில் பாஜக – காங்கிரஸ்
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதும், நரேந்திர மோடியின் செல்வாக்கும் அதற்குத் துணையாக உள்ள ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் தாக்கத்தாலும் பா.ஜ.க.வுக்கான ஆதரவு 5% என்ற அளவில், காங்கிரசுக்கு இணையாக உள்ளது.
பாமக – தேமுதிக
பாமகவின் ஆதரவு 4 சதவீதமாக உள்ளது. தேமுதிகவின் நிலையும் இதேதான். இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளதையே இது காட்டுகிறது. முன்பு பாமகவை விட உயர்ந்த நிலையில் தேமுதிக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் 3 சதவீதம்
தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 3 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அக்கட்சியினர் தலைமை ஏற்கும் முடிவை ஆதரிக்கும் மன நிலையி்ல் உள்ளனர்.
நாம் தமிழர் வளர்ச்சி
2016 சட்டசபைத் தேர்தலில் 1% வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது தன் பலத்தைப் பெருக்கி 3% என்ற அளவில் உள்ளது. இது கணிசமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினி வந்தால்
ரஜினி அரசியலுக்கு வராமல் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு நாம் தமிழருக்கு 5% ஆதரவு கிடைத்தது. அதுவே ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஓட்டு என்ற கேள்விக்கு நாம் தமிழருக்குக் கிடைத்த ஆதரவு 9% என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, ரஜினி, அதிமுகவுக்கு அடுத்த இடத்தை இதில் நாம் தமிழர் கட்சி பெறுகிறது.
-tamil.oneindia.com
தமிழ் உணர்வின் வளர்ச்சி தமிழையும் தமிழினத்தையும் காக்கும் ‘
திருட்டு திராவிடனையும் , ஆரிய கம்மனாடியும் , தமிழன் நம்புவதாக இல்லை !
அந்தோ பரிதாபம்.
திருட்டு திராவிடனையும் , ஆரிய கம்மனாடியும் தமிழன் நம்புவது இருக்கட்டும் , தமிழனை தமிழன் நம்புகிறானா?
தமிழன் நம்புவதால் தான் “நாம் தமிழர் கட்சி” யின் செல்வாக்கு பெருகி உள்ளது!