யோகா தின கொண்டாட்டத்தை முறியடிப்போம்… நெடுஞ்சாலைகளை முற்றுகையிட விவசாயிகள் முடிவு

yoga45டெல்லி: விவசாயிகளின் கஷ்டங்களை பிரதமர் மோடி அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஜூன் 21ம் தேதி யோகா தின கொண்டாட்டத்தன்று போராட்டத்தில் குதிக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

பாஜக அரசு யோகா தினத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ள யோகா தினத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் லக்னோவில் கொண்டாடுகிறார்.

மான்ட்சோரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடி அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எம்எஸ். சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கைபடி விவசாயப் பொருட்களுக்கான விலை அதிகரித்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவில்லை என்று பாரதிய விவசாயிகள் சங்கத்தலைவர் நரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அவர்களின் குரல்வலையை நெறிப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

மேலும் யோகா தினக் கொண்டாட்டத்தின் போது தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக உத்தரபிரதேச நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று நரேஷ் கூறியுள்ளார். இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் குறையை போக்காத அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: