பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.. வதந்தி பரப்பினால்..சட்டசபையில் அமைச்சர் காமராஜ் வார்னிங்

kamaraj-16சென்னை: தமிழக சட்டசபையில் பிளாஸ்டிக் அரிசி குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலையில் தொடங்கிய சட்டசபையில், உணவுத்துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

பிளாஸ்டிக் அரிசி பற்றி மாயத்தோற்றம் உருவாக்கி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார். உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை என்றும், பிளாஸ்டிக் அரிசி இந்தியாவில் எங்கும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்திக் கொள்ள வட்டம் தோறும் முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். மூன்று மாதத்தில் ஸ்மார்ட் கார்ட்டில் உள்ள பிழைகள் திருத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

tamil.oneindia.com

TAGS: