டெல்லி: சர்வதேச தீவிரவாதி என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஷபி அர்மர் தீவிரவாதியாக மாறிய சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவின் பத்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் இந்த ஷபி அர்மர். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. அந்த மோசமான முன் உதாரணத்திற்கு பாத்திரமாகியுள்ளார் ஷபி அர்மர்.
இரு வருடங்கள் முன்புவரை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த இவர், பிறகு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
மீடியா மேற்பார்வை
இந்தியன் முஜகிதீன் தீவிரவாத இயக்கத்திற்காக அவர் துபாயில் இருந்தபோது, அந்த அமைப்பின் தலைவன் ரியாஸ் பத்கல், மீடியா பிரிவு வேலைகளை ஷபி அர்மர்க்கு கொடுத்துள்ளார். இந்தியாவில் எந்த பகுதியிலாவது முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வேலை ஷபி அர்மருக்கு. ஏதாவது அப்படி நடைபெற்றால் அதை ரியாசுக்கு தெரிவிப்பார் ஷபி அர்மர்.
மூளைச்சலவை
ஷபி அர்மர் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்வதும், இந்தியாவிலுள்ள ஆட்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுவதும் இந்தியன் முஜாகிதீனின் பிற தீவிரவாதிகள் வேலையாக இருந்துள்ளது. இருப்பினும் இரு வருடங்கள் முன்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் இருந்து பிரிந்த ஷபி அர்மர் தனது சகோதரர் சுல்தான் அர்மருடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.
ஆப்கனில் இருந்து ஆள்பிடிக்கிறார்
இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல்படி, ஷபி அர்மர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளார். அங்கிருந்தபடி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தீவிரவாதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலை பார்த்து வருகிறார். கேரளாவிலிருந்து சுமார் 24 பேரை தீவிரவாதிகளாக மாற்றியதில் ஷபி அர்மருக்கு முக்கிய பங்கு உள்ளது.
சண்டை போட்டு பிரிந்தார்
இந்தியன் முஜாகிதீன் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல காரணம், பெண்ணிடம், ரியாஷ் சகோதரர் இக்பால் தவறான உறவு வைத்திருந்ததும், தீவிரவாத செயல் செய்ய வந்த பணத்தை கையாடல் செய்ததுமாகும். இதுபோன்ற செயல்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானது என கூறி தகராறு செய்துள்ளார் ஷபி அர்மர் மற்றும் அவரது சகோதரர் சுல்தான். எனவே இந்தியன் முஜாகிதீன் அமைப்பை விட்டு வெளியேறி எங்கே செல்லலாம் என யோசித்தபோது ஐஎஸ்ஐஎஸ் அவர்களுக்கு ஏற்ற அமைப்பு என முடிவு செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ்
அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என யோசித்தபோது, ஐஎஸ்ஐஎஸ்தான் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்பு என்பதை புரிந்து கொண்டு, அந்த பக்கம் போயுள்ளனர். இவர்களை பொறுத்தளவில் அல்கொய்தாவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும்தான் இஸ்லாம் மார்க்கத்தின் நன்னெறிகளை பின்பற்றும் அமைப்புகள் என நம்புகிறார்களாம்.
ஆன்லைன்
இதுவரை எந்த ஒரு தாக்குதலிலும், ஷபி அர்மர் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பின்புறம் இருந்தே இயக்கி வருகிறாராம். ஆன்லைனில் இவர் தீவிரமாக இயங்கி வருவதாக உளவுத்துறை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செயலினால் என்ன நன்மை யாருக்கு ? என்ன சாதித்தீர்கள் ?
செத்தால் நல்ல இடம் கிடைக்கும் என்பதால் தான் அவர் செய்கிறார்! அப்படியே ஆகட்டும்!
செத்தால் சொர்க வாசல் திறக்கும் என்று போனவன் திரும்பி வந்து சொன்னானா . அல்லது சொன்னவன் மெய்ப்பித்து காட்டினானா. சொன்னவன் கடவுளை?