நெல்லை: நெல்லை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பீதியில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர். இரவோடு இரவாக கேரளாவில் இருந்து வந்து தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழி சாலையில் அரியகுளம் கல்லூரி முதல் தொடர்ச்சியாக விட்டு விட்டு ஓரே இடத்தில் கொட்டாமல் மருத்துவ கழிவுகள் கிடந்தன.
அபாய மருத்துவக்கழிவுகள்
கலாவதியான மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஊசிகள், ஊசி மருந்துகள், ரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்டவை சாலையோரங்களில் கிடந்தன. இந்த அபாய மருத்துவ கழிவுகள் அனைத்தும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அழிக்கப்படும் கழிவுகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், தனியார் மருத்தவமனைகளில் சேரும் மருந்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு வள்ளியூர் அருகே பொத்தையடி பகுதியில் உள்ள தனியார் மூலம் தினமும் பெறப்பட்டு அழிக்கப்படுகின்றன.
அனைத்து மருத்துவமனைகளும் இந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இதற்கென தனி வாகனத்தில் வந்து உரிய பாதுகாப்புடன் மருத்துவ கழிவுகளை எடுத்து செல்கின்றனர். இதனால் நான்கு வழி சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் கேரளாவில் இருந்து தான் வருகிறது என்பது இதனால் உறுதியாகிறது.
குப்பைக்கிடங்கா தமிழகம்
கேரளாவில் இருந்து ஏற்கனவே மாமிச கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் பல கழிவுகள் கொண்டு வரப்பட்ட போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாக அதிகாரிகள் இத்தகைய லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இது குறையும் என காட்டமாக தெரிவித்தனர்.
-oneindia.com
கவலைப்பாடாதீர்கள்! இதற்கெல்லாம் அரசியல்வாதிகள் கமிஷன் வாங்கியிருப்பார்கள்! தொற்றுநோய் அவர்களை எட்டாது!
தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்? மட ஜென்மங்கள். பேசுவதற்க்கே எரிகிறது–
தகர தமிழ் நாட்டு (என்ஜின் இல்லாத கார் மாதிரி ) அரசியல் வாதிகளை வாங்கலாம் ..விற்கலாம் ..வாடகைக்கு எடுக்கலாம் …இந்தியாவில் மனித சிறுநீரக விட்பனையில் தகர தமிழகம் முன்னணியில் ..அந்த அளவுக்கு இறங்கிவிட்டது எல்லாம்