சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது.
இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது என சீன ராணுவம் குற்றம் சாட்டிஉள்ளது. இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செங் ஜாங் கூறும்போது, சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம்தான் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளது.
இந்தியா, தன்னுடைய ராணுவத்தை எல்லையில் திரும்ப பெற வேண்டும் எனவும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-lankasri.com
தென் கிழக்கு கடலையே சொந்தம் கொண்டாடும் இவனை எப்படி நம்புவது? திபத்தையே ஆக்கிரமித்தவனை எப்படி நம்ப முடியும்
சீனா ..இந்தியாவை தக்க வேண்டியது இல்லை ….விமான மூலம் சுட சுட பிரியாணியும் …சிகரட் இவைகளை போடடால் இந்தியா ராணுவம் இவைகளை பொறுக்க ஓடிவிடும் ..இலகுவாக மண்ணை பிடிக்கலாம் …அருணாச்சல பிரதேசம் இந்திய வரை படத்தில் சேர்க்க பட்டு உள்ளது .இங்கு இருந்து சீனா போக விசா தேவை இல்லை ஹி ஹி ஹி
பேராசை பெருநட்டம் என்பதை சீனா வெகு விரைவில். உணரும் நாள் தூரமில்லை .