தமிழக மீனவர் கைதுக்கு முற்றுப்புள்ளி!

tamil_fishermenதமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதம்:

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை கிராமத்தில் இருந்து, 23ம் தேதி இரவு, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற எட்டு மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கடந்த, 2015ல் இருந்து, 25 படகுகளை, இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இப்பிரச்னைக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும், அரசு மீட்டுத் தர வேண்டும்.

அமைச்சர் ஜெயகுமார் இது தொடர்பாக, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இது போன்ற நிலையை, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என, முதல்வர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் செயல், மிகவும் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் கைது பிரச்சினைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விரைவில், மீனவர்கள் விடுவிக்கப்படுவர். படகுகள் மீட்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

– Dina Malar

TAGS: