போருக்கு தயாராகிறது சீனா?… எல்லையில் பதற்றம்

india-china-border

பெய்ஜிங்: எல்லையில் அமைதியான சூழல் நிலவ இந்தியா ஒத்துழைப்பு தராவிட்டால், ராணுவ நடவடிக்கைக்கு சீனா தயாராகும் என்று அந்நாட்டு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா – சீனா எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் சீன ராணுவத்தினர் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இது இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, சீனாவின் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த நிபுணர் வூ சீயங் கூறுகையில், ” இந்தியா – சீனா எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இந்தியா அதற்கு சற்றும் செவிசாய்க்காமல் உள்ளது.

இதனால், ராணுவ நடவடிக்கையை சீனா எடுக்கக் கூடும். அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டிவிட நினைக்கிறார். சீனாவை எப்போதுமே ஒரு மிகப் பெரிய போட்டியாகதான் இந்தியா பார்க்கிறது.

ஆனால், இந்தியா பின்தங்கிருப்பதாக சீனா நினைத்தது இல்லை. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: