3 தமிழக மீனவர்கள் கைது! பாயுமா புதிய சட்டம்?

fisher manஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவுப்பகுதி கோவளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய படகும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட படகும், மீன்பிடி உபகரணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் சர்வதேச மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதுடன், 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கடற்தொழில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தச் சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: